பிரிவுகள்
இலக்கியம் பொது

கவிஞர் தேவதேவனுக்கு விருது

நம்ம தேவதேவனுக்கு விருது. வந்துருங்க மக்களே…

பிரிவுகள்
இலக்கியம் பொது மொழிபெயர்ப்பு

ஆகப்பெரிய விழைவு

இன்று எதேச்சையாக The Codeless Code  என்ற நல்ல தளத்தில் சென்று முட்டினேன். Koanகள் என்றால் ஜென் மதத்தில் சொல்லப்படும் தத்துவார்த்தமான சிறு கதைகள். இந்த தளத்தில் ஓர் கணினி நிறுவனத்தில் நிகழ்வது போல சொல்லப்படும் அழகான சிறு கதைகள் உள்ளன. வெறும் கணினி வல்லுனர்களுக்கான கதைகள் அல்ல இவை… அனைவருக்குமானது. மிகவும் பிடித்த கதை ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன் : ஆகப்பெரிய விழைவு  திங்கட்கிழமையன்று ஓர் இளம் துறவி குரு பான்சனிடன் கேட்டான் : குருவே, ஆகப்பெரிய […]

பிரிவுகள்
இலக்கியம் பொது

கதையின் கதை (அ) கொசுவத்திச்சுழற்சி :)

ஒரு விஷயத்தை பற்றி யோசித்தால் சிந்தனை அப்படியே கிளைத்து கிளைத்து வேறு எங்கோ போய் முடியும் எனக்கு. கட்டுரை எழுதுவதே கூட தோன்றியதை எல்லாம் எழுதி வைத்துவிட்டு பிறகு கோர்த்தெடுத்து தான்… ஆக என்னால் கதையெல்லாம் எழுத முடியாது என்று தெளிவாகவே தெரியும். ஆனாலும் ஒரு சின்ன உந்துதல் இருந்துகொண்டே இருந்தது, சிதறிய வடிவத்திலேயே ஒரு கதை எழுதிப்பார்த்தால் என்ன என்று… எழுத நினைத்த கதையின் கரு இது தான் : எதிர்கால தமிழ்நாடு (தனி நாடு). […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

எல்லாமும் விரைகின்றன – ரோபர்ட்டோ யூரோஸ்

மணி காற்றால் நிரம்பியிருக்கிறது ஒலிக்காத போதும் பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது அசையாதபோதும் வானம் முழுதும் மேகங்கள் தனித்திருக்கையிலும் சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது யாரும் உச்சரிக்காதபோதும் எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன சாலைகளே இல்லாத போதும் எல்லாமும் விரைகின்றன அவற்றின் இருத்தலை நோக்கி – ரோபர்ட்டோ யூரோஸ் (Sixth Vertical Poetry) ஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin http://theswisslounge.blogspot.com/2010/07/roberto-juarroz.html தமிழில் : சித்தார்த் புகைப்பட மூலம் : http://www.flickr.com/photos/chemilo/3669746390/in/photostream/ மணி காற்றால் நிரம்பியிருக்கிறது ஒலிக்காத போதும் பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை சமூகம் மொழிபெயர்ப்பு

வியட்நாம்

  வியட்நாம் ”பொண்ணே, உன் பேர் என்ன?” ”தெரியாது.” ”உன் வயசென்ன? எங்கிருந்து வர்ர?” “தெரியாது.” ”ஏன் இந்த குழிய தோண்டின? ” “தெரியாது.” “எவ்வளவு நாளா ஒளிஞ்சிருக்க?” ”தெரியாது.” ”என் விரல ஏன் கடிச்ச?” ”தெரியாது.” ”நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்னு தெரியலையா உனக்கு? ” ”தெரியாது.” “யார் பக்கம் இருக்க நீ? ” ”தெரியாது.” “இது போர். ஏதாவது ஒரு பக்கத்த நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும்.” ”தெரியாது.” ”உன்னோட கிராமம் இன்னும் […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மலையாளம் மொழிபெயர்ப்பு

ஆட்டம் – மலையாள கவிதை மொழிபெயர்ப்பு.

மரத்தில் எஞ்சியிருக்கும் கடைசி இலைக்கு பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா? வாய்க்கும். உச்சிவெயிலில் தரையில் ஒரு சிற்றெறும்பு நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம். காற்றில் ஆடியபடி தொடர்ச்சியாக எறும்பின் பாதையில் நிழலிட அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம். ஆட்டத்தின் உச்சத்தில் இலை மரத்தை விட்டு அகலலாம். அப்போதும், ஓர் குடையாய் எறும்பின் மேலேயே விழ வாய்த்தால், தாய் வந்து குட்டியை ஒளித்ததற்காக கண்சிவக்க கோபிக்கும் வரை அந்த இருப்பு தொடருமானால், அதுவே பெருமகிழ்ச்சி. – வீரன்குட்டி. மலையாள மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=9993 […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மலையாளம் மொழிபெயர்ப்பு

எளிமை – மலையாள கவிதை

எளிமை எனது இருப்பை அறிவிக்கஒரு சிறு கூவல். நான் இங்கு இருந்ததை கூற ஒற்றைச் சிறகுதிர்ப்பு இனியும் இருப்பேன் என்பதன் சாட்சியாய் அடைகாத்தலின் வெம்மை எப்படி இயல்கிறது பறவைகளுக்கு இத்தனைச் சுருக்கமாய் தங்கள் வாழ்வினை கூற? – பி. பி. இராமசந்திரன் தமிழில் : சித்தார்த். மலையாள மூலம் : http://international.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=14010

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் மொழிபெயர்ப்பு

மிலோராட் பாவிச்சின் தன்வரலாறு

மிலோராட் பாவிச் செர்பிய நாவலாசிரியர். இரண்டு மாதங்களுக்கு முன் இவர் இறந்தார். அவரது வலைதளத்தில் அவரே எழுதிய “என் தன்வரலாறு” என்ற சிறிய கட்டுரையை இங்கே மொழிபெயர்த்துள்ளேன். பாவிச்சின் மொழி ஒரு வித கனவினை போன்றது. எந்த தர்கத்துக்குள்ளும் அடைபடாது மிதப்பது. இந்த தன்வரலாறும் அதே மொழியினால் ஆனதே. இதில் ஏதேனும் குறை இருந்தால் அது என் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்திருக்கலாம். பாவிச்சின் ஆங்கில கட்டுரையையும் வாசித்துவிடுங்கள். சுயசரிதை – மிலொராட் பாவிச் நான் கடந்த இருநூறு ஆண்டுகளாக […]

பிரிவுகள்
இலக்கியம் சமூகம் புறநானூறு

அதிநாயகமாக்கத்தின் வேர்

சில மாதங்களுக்கு முன்பு “அதிநாயகமாக்கம்” என்ற பதிவினை எழுதி இருந்தேன்.  அந்த பதிவை ஒரு நடை படித்துவிட்டு வந்தால் நல்லது. இல்லையென்றாலும் பாதகமில்லை. அந்த பதிவின் சாரம் இது தான். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை நம் சமூகம் “அதிநாயகர்களை” உருவாக்கியபடியே உள்ளது. ஔவை, வள்ளுவன், கம்பன் துவங்கி நம் கவிதைகள் முழுக்க இந்த அதிநாயகமாக்கத்தை காண்கிறோம். இராமன், காந்தி, ஒபாமா என அதிநாயகர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் ஏதோ ஒரு தேவையை இந்த அதிநாயகர்கள் பூர்த்தி […]

பிரிவுகள்
இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை

பிரதீபன் கவிதைகள்

ராஜமார்த்தாண்டன் தொகுத்த “கொங்குதேர் வாழ்க்கை” என்ற நூல் நவீன தமிழ் கவிதையின் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்கிறது எனலாம். தமிழின் முக்கியமான கவிஞர்கள் (பிரம்மராஜன் நீங்கலாக) 94 பேரின் சில கவிதைகளை உள்ளடக்கிய பெரும் தொகுதி இது. நா. பிச்சமூர்த்தி, ப்ரமிள், சு. வில்வரத்தினம் போன்ற பரிச்சயமான பெயர்களூக்கிடையே, அறிமுகமில்லாத சில பெயர்களும் கண்ணில் பட்டன. அதில் ஒன்று பிரதீபன் (பக்கம் 160). இந்நூலின் வெளியே பிரதீபனின் பெயரை கேள்விப்பட்டதில்லை. நூலின் பின்குறிப்பு தரும் தகவல்கள் மிக […]