ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்
சதுக்கத்தின் நடுவே
ஒரு மனிதன் மண்டியிட்டான்
— நிற்கவும் வலுவின்றி
களைத்துவிட்டானா?
– அலைகழிக்கப்பட்ட வாழ்க்கை
மோதி உடையும் அந்த கணத்தை அடைந்துவிட்டானா?
– துக்கமெனும் சுத்தியினாலும்
வலியெனும் சுழற்காற்றினாலும்
தாக்கப்பட்டானா?
– தாங்கொணா பாரமாகிவிட்டதா?
– விடைபெரும் தருணத்தில் பாசக்கயிறுடன் நின்றது
மரணத்தின் தூதுவனா?
– சாத்தானா அல்லது கடவுளா?
திடீரென சதுக்கத்தின் மத்தியில்
ஒரு மனிதன் மண்டியிட்டான்
கால்கள் துண்டிக்கப்பட்ட ஒரு குதிரையென
ஆங்கில மூலம் : http://www.poetryinternationalweb.net/pi/site/poem/item/10599
One reply on “ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்”
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_15.html) சென்று பார்க்கவும்… நன்றி…