பிரிவுகள்
அமெரிக்க இலக்கியம் சமூகம் நூல் அறிமுகம்

இடிக்கும் கேளிர்க்கு உலகறிவித்தல்

மூடிய சிறிய அறைகள் எனக்கு என்றுமே பயம் அளிப்பவை. குறுகிய வெளியில் அடைபட்டு கிடப்பதை போல நினைத்துப்பார்த்தாலே உடல் பயத்தில் சிலிர்த்துக்கொள்ளும். ஒரு குறுந்தொகை பாடல் உண்டு… அந்த கவிதையை, அதன் ஆதார உவமையை நினைக்கும் போதெல்லாம் இந்த claustrophobic உணர்வு வரும்… இடிக்கும் கேளிர்! நும்குறை யாகநிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே! வெள்ளிவீதியார் (குறுந்தொகை – 58) இந்த காதல் கட்டுப்படுத்தப்பட […]

பிரிவுகள்
அரசியல் சமூகம் பொது மொழிபெயர்ப்பு

கொரோனாவைரஸுக்கு பின்னான வாழ்வு – யுவால் நோவா ஹராரி

இந்த புயலும் கடந்து போகும். ஆனால் இப்போதைய நமது தேர்வுகள் இனி வரும் ஆண்டுகளில் நம் வாழ்வை மாற்றலாம்.  ஆங்கில மூலம்: https://www.ft.com/content/19d90308-6858-11ea-a3c9-1fe6fedcca75 மனித இனம் ஒரு உலகலாவிய சிக்கலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நம் தலைமுறையின் ஆகப்பெரிய சிக்கலாக இது இருக்கலாம். அடுத்த சில வாரங்களில் அரசுகளும் மக்களும் எடுக்கும் முடிவுகள் இனி வரப்போகும் பல ஆண்டுகளுக்கு நமது எதிர்காலத்தை வடிவமைக்கலாம். நமது சுகாதார அமைப்புகளை மட்டுமல்ல, நம் பொருளாதாரத்தை, அரசியலை, பண்பாட்டையுமே கூட மாற்றலாம். நாம் துரிதமாகவும் […]

பிரிவுகள்
அரசியல் சமூகம் பொது மொழிபெயர்ப்பு

கொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமையின்றி நிற்கிறது – யுவால் நோவா ஹராரி

ஆங்கில மூலம் : https://time.com/5803225/yuval-noah-harari-coronavirus-humanity-leadership/ கொரோனாவைரஸ் கொள்ளைநோய்க்கு பலரும் உலகமயமாக்கத்தைப் பழி சொல்கின்றனர். இது போன்ற நோய்ப்பரவல்களைத் தடுப்பதற்கான ஒரே வழி சுருங்கிக்கொள்வதே என்று எண்ணுகின்றனர். மதில்களை எழுப்புதல், பயணங்களை கட்டுப்படுத்துதல், வணிகத்தைச் சுருக்கிக்கொள்ளுதல். குறுகிய கால தனிமைப்படுத்துதல் கொள்ளை நோயின் பரவலைத் தடுப்பதற்கு அவசியம் தான்; ஆனால் நீண்ட கால தனிமைப்படுத்துதல், நோய்த் தொற்றுக்கு எதிரான எந்த வித உண்மையான பாதுகாப்பையும் அளிக்காது என்பது மட்டுமல்ல, பொருளாதார சீர்குலைவிற்கும் இட்டுச்செல்லும். கொள்ளை நோய்களுக்கான உண்மையான முறிமருந்து […]

பிரிவுகள்
சமூகம் பொது

அறவினை யாதெனின்…

இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் Game of Thronesநாவலில் வரும் ஒரு மன்னர் எட்டார்ட் ஸ்டார்க் (Eddard Stark). நாவலின் துவக்கத்தில் ராணுவத்தை விட்டு ஓடிய ஒருவனுக்கு அந்நாட்டு சட்டப்படி மரணதண்டனை அளிக்கிறார். அவனது தலையை துண்டிக்கும் செயலை மன்னரே செய்கிறார். முடித்துவிட்டு மாளிகைக்கு திரும்பும் பொழுது அவரது பத்து வயது மகனுக்கு தன் செயலுக்கான காரணத்தை அவர் விளக்கும் வரி ஏதோ செய்தது வாசிக்கும் பொழுது : ”நீ ஒரு மனிதனின் உயிரை பறிக்க முடிவெடுக்கிறாயெனில் அவனை கண்ணோடு […]

பிரிவுகள்
அரசியல் சமூகம் பொது

ஈரோடுக்கு போன சென்னைவாசி. :)

சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஈரோடு சென்றிருந்த பொழுது எழுதி வைத்தது…. ****** கடந்த 20 நாட்களாக ஈரோட்டில் இருக்கின்றேன். பெரும்பாலும் வீட்டில் காயத்ரி, அமுதினியுடன். அவ்வப்போது நகர்வலம் செல்வதும் உண்டு. ஈரோட்டில் தனியாக சுற்றும் அனுபவம் இம்முறை தான் வாய்த்திருக்கிறது. சாலைகள் தங்களின் பூடகத்தன்மையை மெல்ல இழக்கத்துவங்கி விட்டன. 3 நாட்களுக்கு முன்னால் “இப்படியே நேரா போனீங்கன்னா எம்.ஜி.ஆர் சிலை நால்ரோடு வரும்… அங்க இருந்து சிக்னல் தாண்டி நேரா போனா பஸ் ஸ்டாண்ட்” என்று […]

பிரிவுகள்
அரசியல் காந்தி சமூகம் வரலாறு

காந்தி கோட்சே கூட்டறிக்கை

காந்தி கொலை செய்யப்பட்ட போது நேரு கூறியதை போல அவர் வாழ்ந்த வாழ்வின் தருக்கப்பூர்வமான உச்சக் காட்சியாகவே (climax) அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது மரணமும் கூட ரொம்பவும் கம்பீரமாகத்தான் நிகழ்ந்தது. பலருக்கும் வாய்க்காத மரணமல்லவா அது. கடைசி ஆண்டுகளில் காந்தியும் கோட்ஸேவும் ஒரே திசையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தார்கள். கொலையை நோக்கி கோட்ஸேவும் கொலை செய்யப்படுதலை நோக்கி காந்தியும். தனது முடிவை பற்றி அவர் அறிந்தே இருந்தார். முதல்நாள் மாலை உட்படப் பலமுறை அவர் இதை […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை சமூகம் மொழிபெயர்ப்பு

வியட்நாம்

  வியட்நாம் ”பொண்ணே, உன் பேர் என்ன?” ”தெரியாது.” ”உன் வயசென்ன? எங்கிருந்து வர்ர?” “தெரியாது.” ”ஏன் இந்த குழிய தோண்டின? ” “தெரியாது.” “எவ்வளவு நாளா ஒளிஞ்சிருக்க?” ”தெரியாது.” ”என் விரல ஏன் கடிச்ச?” ”தெரியாது.” ”நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்னு தெரியலையா உனக்கு? ” ”தெரியாது.” “யார் பக்கம் இருக்க நீ? ” ”தெரியாது.” “இது போர். ஏதாவது ஒரு பக்கத்த நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும்.” ”தெரியாது.” ”உன்னோட கிராமம் இன்னும் […]

பிரிவுகள்
இலக்கியம் சமூகம் புறநானூறு

அதிநாயகமாக்கத்தின் வேர்

சில மாதங்களுக்கு முன்பு “அதிநாயகமாக்கம்” என்ற பதிவினை எழுதி இருந்தேன்.  அந்த பதிவை ஒரு நடை படித்துவிட்டு வந்தால் நல்லது. இல்லையென்றாலும் பாதகமில்லை. அந்த பதிவின் சாரம் இது தான். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை நம் சமூகம் “அதிநாயகர்களை” உருவாக்கியபடியே உள்ளது. ஔவை, வள்ளுவன், கம்பன் துவங்கி நம் கவிதைகள் முழுக்க இந்த அதிநாயகமாக்கத்தை காண்கிறோம். இராமன், காந்தி, ஒபாமா என அதிநாயகர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் ஏதோ ஒரு தேவையை இந்த அதிநாயகர்கள் பூர்த்தி […]

பிரிவுகள்
இலக்கியம் கம்பராமாயணம் சமூகம் திருக்குறள் பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது

அதிநாயகமாக்கம்

கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது. வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார் ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி, காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை சமூகம் மொழிபெயர்ப்பு

கவிதையினூடே காணக்கிடைக்கும் வரலாறு…

”சங்க காலக்கவிதைகள் எதை குறித்து பேசும் போதும் மனதை பற்றியே பேசுகின்றன” என்று ஜெயமோகன் சங்கச்சித்திரங்களில் எழுதி இருந்தார். சங்க கவிதைகளுக்கு மட்டுமல்ல, இதுவே கவிதைக்கான பொதுப்பண்பு. கவிதை எதை பற்றி பேசினாலும் எத்தனை போலியாக/உண்மையாக இருந்தாலும் அது கவிஞனின் மனப்பதிவு தான். கவிதையின் பாடுபொருளாக வரலாறு ஆகும் போது என்னாகிறது? கவிதைக்கு (அல்லது இலக்கியத்திற்கு) வரலாற்றின் நிகழ்வுகளல்ல… விளைவுகளே முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் நுட்பமாக வரலாறு தத்துவமாக உருமாறியே கவிதைக்குள் நுழைகிறது. சமீபத்தில் வரலாறை மையமாக […]