பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மலையாளம் மொழிபெயர்ப்பு

எளிமை – மலையாள கவிதை

எளிமை

எனது இருப்பை அறிவிக்க
ஒரு சிறு கூவல்.

நான் இங்கு இருந்ததை கூற
ஒற்றைச்
சிறகுதிர்ப்பு

இனியும் இருப்பேன்
என்பதன் சாட்சியாய்
அடைகாத்தலின்
வெம்மை

எப்படி இயல்கிறது
பறவைகளுக்கு
இத்தனைச் சுருக்கமாய்
தங்கள் வாழ்வினை கூற?

– பி. பி. இராமசந்திரன்

தமிழில் : சித்தார்த்.

மலையாள மூலம் : http://international.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=14010

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

18 replies on “எளிமை – மலையாள கவிதை”

மலையாளக் கவிதைகள் எளிமையை நோக்கி நகர்வதை பழைய மலையாளக்கவிஞர்கள் விரும்புவதில்லை.இசையும் தாளமும் ஓசையும் அவர்கள் கவிதையை நிரப்புவதாக நம்புகிறார்கள். இந்த நம்பிகையை தகர்க்கும் கவிஞர்கள் குழுவில் பி.பி.ராமச்சந்திரன் முக்கியமான ஆளுமை.இதற்கு ஜெயமோகனும் அடித்தளமிட்டிருக்கிறார்.

இனி கவிதைக்கு.

எப்படி கழிகிறது
பறவைகளுக்கு
இத்தனைச் சுருக்கமாய்
தங்கள் வாழ்வினை கூற?

இப்படி கவிதையில் வரும் கேள்விகள் கவிஞனை நோக்கி அல்லது கவிஞனின் மனக்குவியத்தை நோக்கி வாசகனை நகர்த்துகின்றன. இந்தக் கேள்விகள் எதற்கு கவிதையில் வருகின்றன. இதே விமர்சனம் தேவதேவனின் கவிதைகள் மீதும் எனக்குண்டு. அது பற்றி தனியாக விவாதிக்கலாம்.

இந்தக் கவிதை எளிமையான, மனதிற்கு இதம் தரக் கூடிய கவிதை.

நன்றி மணி.

இந்த கேள்வியும் தேவதேவனின் பல கேள்விகளை போல கவிஞன் கவிதையை தொகுக்கும் முயற்சி என்று தான் மணி தோன்றுகிறது. கவிதையின் மொத்த பார்வை என்ன என்பதற்கான கவிஞனின் கருத்து அந்த கடைசி வரி. இந்த வரிகள் இல்லதிருந்தால் கவிதை இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும் என்பது உண்மையே…

ஆனால் கவிதைகளின் இறுக்கம் என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. ஒரு கவிதையின் சிறு வரியை கொண்டே வாசகன் வேறு தளங்களுக்கு செல்ல முடியும் என்னும் போது கவிதையின் மொத்த வடிவம் குறித்தும் , இறுக்கம் குறித்தும் இத்தனை கவலை கொள்ள வேண்டுமா?

இத்தனை சுருக்கமாய்
வாழ்வினை கூற
பறவைகளுக்கு இயல்கிறது(ippadiyum erukkalaam raasaa?)

apadiyum erukkalaamo? ipadiyum erukalaamo? yen epadi ezuthinaar kavignar? enkira methavithanamaana allathu vimarsanam engira peyaril oru kavithaiyai allathu athan moolamaaga kavignanin mozhi kooralai kelvikku ullaakka naan varavillai…ethu oru kavithai,vovorumuraiyum naam adaiyave mudiyaatha thaai kavithaiyai nokiye payanikirathu(yaaro sonnathu)namidamiruthu janikum kavithaigal.
avaravar kavithaiyai avaravar ezuthukuraargal illaiyaa? mukunth nagarajan kuda kavignar thaan,(jayamohan matrum manushya puthran thaya vaal)!!!varigal illaamal erunthaal enpathu indha kavithaiyai poruthavarai veru mathiriyaana kelvi?…but whatis in front of our eyes as a poem,does it melts abruptly,i mean due to the simplicity of the poem.but the simplicity has its own complexities..we must understand it as well. nandri sidhu. bye.

சௌரியின் பின்னூட்டத்தின் தமிழ் வடிவம் :

இத்தனை சுருக்கமாய்
வாழ்வினை கூற
பறவைகளுக்கு இயல்கிறது(இப்படியும் இருக்கலாம் ராசா?)

அப்படியும் இருக்கலாமோ? இப்படியும் இருக்கலாமோ? ஏன் இப்படி எழுதினார் கவிஞர்? என்கிற மேதாவித்தனமான அல்லது விமர்சனம் என்கிற பெயரில் ஒரு கவிதையை அல்லது அதன் மூலமாக கவிஞனின் மொழிகூறலை கேள்விக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை… இது ஒரு கவிதை, ஒவ்வொரு முறையும் நாம் அடையவே முடியாத தாய் கவிதையை நோக்கியே பயணிக்கிறது (யாரோ சொன்னது) நம்மிடமிருந்து ஜனிக்கும் கவிதைகள்.

அவரவர் கவிதையை அவரவர் எழுதுகிறார்கள் இல்லையா? முகுந்த் நாகராஜன் கூட கவிஞர் தான், (ஜெயமோகன் மற்றும் மனுஷ்யபுத்திரன் தயவால்)!!! வரிகள் இல்லாமல் இருந்தால் என்பது இந்த கவிதையை பொருத்தவரை வேறு மாதிரியான கேள்வி? … but whatis in front of our eyes as a poem,does it melts abruptly,i mean due to the simplicity of the poem.but the simplicity has its own complexities..we must understand it as well.

நன்றி சித்து. பை.

சௌரி,

கவிதை தரும் அனுபவம் என்பது வாசகனுக்கானது. விமர்சன தொப்பியை அணிந்துகொண்டு கவிதைகளை அணுகுவது அந்த அனுபவத்தை எந்த அளவிற்கு தரும் என்று தெரியவில்லை. கவிஞன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கவிதை என்பது வாசகனின் வெளி. அங்கு எப்படி பயணிப்பதென்று வாசகனே தீர்மானிக்கிறான். ஜெயகாந்தன் சொன்னதாக ஒரு வரி படித்தேன். “விஸ்வரூபம் என்பது காட்டப்படுவதல்ல, காண்பது.”. இது கவிதை வாசிப்பிற்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

தேவதேவனின் பல கவிதைகள் முதல் மூன்று வரிகளிலேயே முடிந்துவிடுவதாய் எனக்கு தோன்றும். அதன் பின் தொடரும் வரிக்கூட்டம் எனக்கானது அல்ல. இது எனது வாசிப்பு மட்டுமே… வேறோர் வாசகர் வேறோர் கோணத்தில் அனுக முடியும் அக்கவிதையை. எனவே வாசகனுக்கு தேவையான கவிதையை ஏன் கவிஞர் எழுதவில்லை என்பது அர்த்தமற்ற கூற்றாகவே தோன்றுகிறது. கல்யாண்ஜி சொல்வது போல… பூ பூத்தல் அதன் இஷ்டம். போய் பார்த்தல் நம் இஷ்டம்.

//but whatis in front of our eyes as a poem,does it melts abruptly,i mean due to the simplicity of the poem.but the simplicity has its own complexities..we must understand it as well.//

உண்மை. இங்கு குறிக்கப்படும் எளிமை என்பது நம் ஆதிவாழ்வின் எளிமை. நம் பரிணாம வளர்ச்சியின் பாதையில் எங்கோ நாம் தொலைத்துவிட்ட எளிமை அது. இங்கு எளிமையாய் முன்வைக்கப்படுவது மிக ஆழமான சிக்கலான ஓர் பாதைக்கே அழைத்துச்செல்கிறது.

கவிதையின் மொழிபெயர்ப்பு இங்கே நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. மனம் முழுவதும் ஓர் அமைதி பரவிக்கிடக்கிறது. அருமை சகோ…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s