மரத்தில்எஞ்சியிருக்கும்கடைசி இலைக்குபெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா?வாய்க்கும்.உச்சிவெயிலில்தரையில் ஒரு சிற்றெறும்புநடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம்.காற்றில் ஆடியபடிதொடர்ச்சியாகஎறும்பின் பாதையில்நிழலிடஅந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.ஆட்டத்தின் உச்சத்தில்இலைமரத்தை விட்டு அகலலாம்.அப்போதும்,ஓர் குடையாய்எறும்பின் மேலேயேவிழ வாய்த்தால்,தாய் வந்துகுட்டியை ஒளித்ததற்காககண்சிவக்க கோபிக்கும் வரைஅந்த இருப்பு தொடருமானால்,அதுவேபெருமகிழ்ச்சி.– வீரன்குட்டி.
மலையாள மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=9993
தமிழில் : சித்தார்த்.
6 replies on “ஆட்டம் – மலையாள கவிதை மொழிபெயர்ப்பு.”
fantastic!
நன்றி ராஜாராம்.
Very nice one… Thanks for the translation..
simply super
nice..
rasikka vaikkirathu…………..