மணி காற்றால் நிரம்பியிருக்கிறது
ஒலிக்காத போதும்
பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது
அசையாதபோதும்
வானம் முழுதும் மேகங்கள்
தனித்திருக்கையிலும்
சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது
யாரும் உச்சரிக்காதபோதும்
எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன
சாலைகளே இல்லாத போதும்
எல்லாமும் விரைகின்றன
அவற்றின் இருத்தலை நோக்கி
– ரோபர்ட்டோ யூரோஸ் (Sixth Vertical Poetry)
ஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin
http://theswisslounge.blogspot.com/2010/07/roberto-juarroz.html
தமிழில் : சித்தார்த்
புகைப்பட மூலம் : http://www.flickr.com/photos/chemilo/3669746390/in/photostream/
ஒலிக்காத போதும்
பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது
அசையாதபோதும்
வானம் முழுதும் மேகங்கள்
தனித்திருக்கையிலும்
சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது
யாரும் உச்சரிக்காதபோதும்
எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன
சாலைகளே இல்லாத போதும்
எல்லாமும் விரைகின்றன
அவற்றின் இருத்தலை நோக்கி
– ரோபர்ட்டோ யூரோஸ் (Sixth Vertical Poetry)
ஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin
http://theswisslounge.blogspot.com/2010/07/roberto-juarroz.html
5 replies on “எல்லாமும் விரைகின்றன – ரோபர்ட்டோ யூரோஸ்”
//எல்லாமும் விரைகின்றன
அவற்றின் இருத்தலை நோக்கி//
இந்த வரி ரொம்பப் பிடிச்சிருக்குது. இதன் பின்னால் தொனிக்கும் பிரமாண்டம் அருமை!
வரிக்கு வரி அழ்ந்த அர்த்தம் பொதிந்த கவிதை சித்தார்த். கண் பருக கொடுமைக்கு நன்றி
நல்லா இருக்கு சித்து. ‘fleeing’ வெவ்வேறு வார்த்தைகளில் மொழிபெயர்ப்பானது அழகு 🙂
அனுஜன்யா
சென்ஷி, லாவண்யா – நன்றி.
அனுஜன்யா 🙂 நன்றி. இன்னைக்கு இந்த கவிதைய பத்தி சென்ஷியும் நானும் பேச ஆரம்பிச்சோம். அது எங்க எங்கையோ கொண்டு போச்சு. இதே fleeing சொல் வெவ்வேற பொருள் கொள்றத பத்தியும் பேசினோம்… கடைசி பத்திக்கு முன் பத்தில இருக்கற fleeingஅ தப்பித்தல்னு பொருள் கொண்டா இன்னும் எங்கையோ போகுது கவித 🙂
திருப்திகரமான வரிகள்..அருமையான பகிர்வுங்க சித்தார்த்..:)