காந்தி கொலை செய்யப்பட்ட போது நேரு கூறியதை போல அவர் வாழ்ந்த வாழ்வின் தருக்கப்பூர்வமான உச்சக் காட்சியாகவே (climax) அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது மரணமும் கூட ரொம்பவும் கம்பீரமாகத்தான் நிகழ்ந்தது. பலருக்கும் வாய்க்காத மரணமல்லவா அது. கடைசி ஆண்டுகளில் காந்தியும் கோட்ஸேவும் ஒரே திசையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தார்கள். கொலையை நோக்கி கோட்ஸேவும் கொலை செய்யப்படுதலை நோக்கி காந்தியும். தனது முடிவை பற்றி அவர் அறிந்தே இருந்தார். முதல்நாள் மாலை உட்படப் பலமுறை அவர் இதை சொல்லியிருந்தார். யாரோ சொன்னது போல காந்தியின் கொலை என்பது காந்தியும் கோட்ஸேவும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை.
– அ. மார்க்ஸ் (காந்தியும் தமிழ் சனாதனிகளும் [எதிர் வெளியீடு] நூல் முன்னுரையில் இருந்து)
9 replies on “காந்தி கோட்சே கூட்டறிக்கை”
🙂
ennamo solraanga, onnum vilankalle
ஹிம்சாகர் எழுதிய ‘கோட்ஸே’வைப் படித்தால் மார்க்ஸ் சொல்வது சரி என்றுதான் படுகிறது. காந்திக்கு இதைக்காட்டிலும் ஆகச்சிறந்த முடிவு இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. கோட்ஸே தன் கொடுங்கொலையின் மூலம் காந்தியை எப்போதும் வாழச் செய்தார் என்பதே என் தனிப்பட்ட அபிப்ராயம்.
ஆம் செல்வேந்திரன். அவரது மரணம் அவரை பல சிலுவைகளில் இருந்து விடுவித்து விட்டது என்று தான் படுகிறது. காந்தி இருந்திருந்தால் 48ல் பாகிஸ்தானுக்கு நடைபயணம் மேற்கொண்டிருப்பார் என்றும் அது பல பிரச்சனைகளை தீர்த்துவைத்திருக்கும் என்றும் நாம் நம்பிக்கொள்ளலாம் இப்போது.
ஹிம்சாகர் நூல் அறிமுகத்திற்கு நன்றி செல்வேந்திரன். தேடிப்பிடிக்கிறேன்.
வாய்ப்பு கிடைத்தால் கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலமான “May I Please Your Honour” என்ற நூலினை வாசிக்கவும். வரலாறு என்பது ரப்பர் பேண்ட் மாதிரி… எப்படியும் வளைக்கலாம் என்று தெரியவரும். 🙂
மிகச் சரியான பதிவு.சால பொருந்தும்.
Hi Sidharth, i published the article in 2006 and got a mail in appreciation from Ghodse’ Brother. Here is the link.. Click Here
3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்
http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html
எல்லாவற்றையும் வெறுப்பின் மொழியிலேயே பேசும் அ.மார்க்ஸ் காந்தியை எப்படி புரிந்துகொண்டார் என்ற வெருவியப்பு – காந்தியும் சனாதானிகளும் படித்தபின்.