பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

வென்றவர்கள்

வென்றவர்கள் – யோ ஃபெங்

எவரெஸ்ட் மீது ஏறியவர்களுள்
பலர் வழியிலேயே இறக்க
எஞ்சியவர்கள் சிகரமடைந்தனர்.
காமெராக்களை பார்த்தபடி கொடியசைத்தனர்.
அகில உலகமும் அறிந்துகொள்ளட்டும்
உலகின் பெருஞ்சிகரம் தங்களால் வெல்லப்பட்டதை.
காமெராக்கள் காட்டாது விட்டன
அமைதியாய் ஓரத்தில் நின்றிருந்த ஷெர்ப்பாக்களை.
அவர்கள் சுமைதூக்கிகள்
வென்றவர்களாய் கருதப்படுவதில்லை
இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தந்தால்
சோமோலுங்மாவை* வெல்ல
யாருக்கும் உதவுவார்கள் அவர்கள்.

சோமோலுங்மா – இமய மலையின் திபெத்திய பெயர்.

ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

14 replies on “வென்றவர்கள்”

இந்த விசயத்தை நான் பல நாட்கள் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு வழிக்காட்டியாக செல்பவர்களைப் (இவர்கள் பலமுறை உச்சியை தொட்டிருப்பார்கள் என்பது வேறு விசயம்) பற்றி எந்த செய்தியும் வராமல் இருப்பது ஆச்சரியம் தான். (ஆனால் பல இடங்களிலும் பல விசயங்களிலும் இப்படித்தான் நடக்கிறது) உதாரணமாக சொல்லவேண்டுமானால் திமுக அரசு ஓசியில் வண்ண தொலைக்காட்சி கொடுத்து ஆனால் யார்வீட்டு பணம்???

உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் படித்து முடித்ததுமே ஒரு பயம் வந்து நெஞ்சில் அப்பிக்கொள்கிறது. கொஞ்சம் கூட வளைந்து நௌியாமல் தன்னுடைய கருத்துக்களை மிகத் தௌிவாக எடுத்த வைத்த ஆச்சரியத்தில் ஏற்கனவே வெட்ட வௌிகளை வெறித்துக்கொண்டுருக்கும் என் கண்கள் இன்னமும் அதிகப்படுத்தி விடுவீர்களோ? அதுவும் அந்த இமாலய சுமை தூக்கிகள் கவிதை. எத்தனை பதிவுகள் எழுத வேண்டிய விஷயங்கள்.

நமஸ்காரம். வாழ்த்துக்கள். தேவியர் இல்ல பூங்கொத்து.

இது போன்ற சின்ன சின்ன பங்களிப்புகளால் தான் இருட்டு உலகம் இன்று மெர்குரி பூக்களாய் மாறி உள்ளது.

தேவியர் இல்லம்.

திருப்பூர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s