பிரிவுகள்
இலக்கியம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க

மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள் – புத்தக மொழிபெயர்ப்பு – அறிமுகம்

மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள்<p><p>

 

Tuesday’s with Morrie (மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள்) என்ற புத்தகத்தை பற்றி கமல்ஹாசனின் ஒரு பேட்டியில் தான் முதன்முதலில் கேள்விப்பட்டேன். யாருக்கோ Tuesday’s with Morrie ஐ பரிசளித்ததாக கூறினார். புத்தகத்தைப் பற்றி ஏதேனும் கூறினாரா என நினைவில்லை. ஆனால் பெயர் மட்டும் மனதில் தங்கிவிட்டது. பின்னொரு நாள் குவைத்தில் இருந்து சென்னைக்கு ஶ்ரீலங்கன் ஏர்வேஸ் மூலமாக செல்லும் போது (குறைந்தபட்சம் எட்டு மணி நேரம்) துபாய் விமான நிலையத்தில் புத்தகம் கைக்கு கிடைத்தது. வீடு போய் சேர்வதற்குள் முடித்துவிட்டிருந்தேன் புத்தகத்தை. கடைசி சில பக்கங்கள் தொண்டைக்குள் பந்தை உருளவிட்டன. கண்களை பனிக்க செய்தன. மிட்ச் ஆல்பம் என்ற புகழ்ப்பெற்ற விளையாட்டு வர்ணனையாளர் எழுதிய புத்தகம் இது. மரணத்தை நேருக்கு நேர் நோக்கியபடி பயணித்துக்கொண்டிருக்கும் மோரி என்ற நோய்வாய்ப்பட்ட பேராசிரியருக்கும் அவரது மாணவரான மிட்ச் ஆல்பமுக்கும் சில செவ்வாய்க்கிழமைகள் நிகழும் சந்திப்புகளே புத்தகமாக உருவாகியிருந்தது.

இது ஒரு கதையாக எழுதப்பட்டிருந்தால், படித்த கணமே இதை தூக்கிப்போட்டிருப்பேன். ஆனால் ஒரு மனிதன் இப்படி வாழ்ந்து முடித்திருக்கிறான் என்ற எண்ணம் மனதின் மீது தனது ஒளிக்கீற்றுக்களை வீசியபடியே இருந்தது. சொற்கள் என்பவை வெறும் சொற்கள் அல்ல. இதை அனேகமாய் வாசிக்கும் பழக்கமுள்ள அனைவருமே ஒருமுறையேனும் உணர்ந்திருப்பீர்கள். ஒரு கட்டத்தில் மை, காகிதக்கறை, ஒலி, ஒளி என எல்லாவற்றையும் தாண்டி உயிர்கொண்டெழும் அவை. சக உயிரென பாவித்து அவற்றிற்க்கு ஏதேனும் கைமாறு செய்தே ஆகவேண்டும் என தோன்றும் கணங்கள் உண்டு. அப்படி தோன்றிய ஒரு கணத்தில் தான் என்னாலானது இச்சொற்களை மொழிப்பெயர்த்தல் மட்டுமே என முடிவெடுத்து இரண்டு அத்தியாயங்களை மொழிப்பெயர்த்தேன். மேலும் மொழிப்பெயர்க்க ஏதேனும் உந்துதல் தேவை என்பதனாலும் நிகழும் தவறுகளை உடனுக்குடன் களையலாம் என்பதாலும் இவற்றை இங்கு பதிப்பிக்கிறேன். வாரம் ஒரு அத்தியாயம் என்பது இப்போதைய கணக்கு. பார்க்கலாம் என்ன ஆகிறதென.

குறிப்பு : “அங்கிங்கெனாதபடி” ஐ தொடங்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிவடைகின்றன. மூன்றாம் ஆண்டினுள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில் மோரியாவது என் சோம்பலை போக்கி தொடர்ந்து பதிவுகளை வெளிவரச்செய்வார் என்ற நம்பிக்கையுடன்….

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

11 replies on “மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள் – புத்தக மொழிபெயர்ப்பு – அறிமுகம்”

//மோரியாவது என் சோம்பலை போக்கி தொடர்ந்து பதிவுகளை வெளிவரச்செய்வார் என்ற நம்பிக்கையுடன்….//

அதே நம்பிக்கையுடன் தான் நாங்களும் இருக்கிறோம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்தார்த்

சினேகபூர்வம்,
முபாரக்

“tuesdays with Morrie”எனக்கும் பிடித்த புத்தகங்களுள் ஒன்று.ராபின் ஷர்மா இந்த புத்தகத்தை பரிந்துரைத்திருந்தார்.அவரும் இப்புத்தகத்தை ஒரு விமானபயணத்தின் போதே படித்து முடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.அவர் தமது “Who will cry when you die “என்ற புத்தகத்தில் tuesdays with morrie பற்றி ஒரு அத்தியாயம் எழுதியுள்ளார்.அதனை இவ்வாறு முடிக்கிறார்
“This beautiful book (Tuesdays with Morrie) will remind you of the importance of counting your blessings daily and having the wisdom to honor life’s simplest pleasures no matter how busy your life becomes. One of the legacies I will leave to my two children will be a library of books that have inspired and touched me. And ‘Tuesdays with Morrie’ will be one that will sit out in front.”

இரண்டாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.மோரி மொழிபெயர்ப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

[…] நியு யார்க் டைம்ஸின் ‘அதிகம் விற்பனையான பட்டியலில்’ நெடுநாள் இடம்பெற்ற புகழ் பெற்ற புத்தகமான Tuesdays with Morrie- இனை மொழிபெயர்க்கிறார் சித்தார்த். […]

சித்து,
நானும் நேற்று இந்த புத்தகத்தை வாங்கினேன். உன்னை போல விமானத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏதோ ஏழைகளுக்கு ஏற்ற ரயில் பயணத்தில் படித்தேன். இன்னும் முடிக்கவில்லை.

அறிமுகத்திற்கு நன்றி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s