கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
கனைக்கும் கன்றின் ஒலிகேட்டு அதற்காய் இரக்கப்படும் தாய்ப்பசுவின் மடியிலிருந்து பால் சுரக்க, அந்தப்பால் அவ்வீட்டினை நனைத்து சேறாக்கும். அப்படிப்பட்ட நல்ல செல்வந்தனின் தங்கையே! பனி தலைமீதி விழ, உன் வாசற்கதவை பிடித்த படி, கோவத்தினால் இராவணனை அழித்த, மனதிற்கு இனியவனாகிய இராமனைப் பாடுகின்றோம். நீ வாய் திறவாமல் இருக்கின்றாய். இனியாவது எழுத்திரு. இது என்ன பேருறக்கம்? நாங்கள் உன்னை எழுப்புவது எல்லா வீட்டாருக்கும் தெரிந்துவிட்டது.
One reply on “இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் : ஆண்டாள் திருப்பாவை – 12”
மார்கழித் திங்கள் மதி நிரைந்த நன்னாளாம் நீராடப்போதுவீர்….
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்……
இதுவரை திரையில் தான் நாம் திருப்பாவையை கேட்டிருக்கிறோம். இணையதளத்திலும் வெளியிட்டமைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
ஐஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு!!
(5 * 5 = 25 + 5 = 30 திருப்பாவை பாடல்களை அறியாமல் இருப்பவரை இவ்வையகம் சுமப்பது வம்பாகும்)
திருப்பாவை முப்பதும் செப்பினால் வாழியே!!
பெரியாள்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!!
இவ்வளவு ஏன் திருவேங்கடத்திலுள்ள ஏழுமலையானே ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்த பின் தான் எந்த ஒரு விழாவிலும் பங்கு கொள்வார். அவ்வளவு பெருமை வாய்ந்தது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில்.