கையில் கிடைத்த பழைய புத்தகமொன்றின் [கலாப்ரியா கவிதைகள்] 99தாவது பக்கத்தில் புத்தகக்குறியாக இருந்த காதிதமொன்றில் பார்க்க நேர்ந்தக் கவிதையிது. க.எழில் யார் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்…
என்ன செய்து கொண்டிருப்பாய்
இந்நேரம் நீ…
ஆசையை நான் பூசித்தந்த
பிறந்தநாள் பரிசை பார்த்துக் கொண்டும்…
சுகங்களற்றதோர் உலகில்
தனித்தெறியப்பட்ட பிரம்மையோடு
காய்ந்த ரோஜா இதழ்களை முத்தமிட்டு
நெக்குருகி என்னைக் கனவித்துக் கொண்டும்…
எதைச் செய்யும்போதும் குறுக்கிடும்
பாழாய்ப்போன என்
ஞாபகங்களைச் சலித்துக் கொண்டும்…
சோதனையாய் கழியுமென
நான் கற்பனிக்கும் உன்பொழுதுகள்
கோயில் பூசைகளென்றும்
டி.வி. படங்களென்றும்கூட
கழிந்து கொண்டிருக்கலாம்
யாதொரு பிரக்ஞையுமற்று.
– க. எழில்
2 replies on “எதேச்சையாய் சந்தித்த கவிதை”
[…] இந்தக் கவிதையை எழுதிய க.எழில் யாரென்று தெரிந்தால், சித்தார்த்துக்கு மட்டுமல்ல, எனக்கும் சொல்லுங்கள். […]
nalla kavidhai eliluku valthukkal