பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

கீழ்வானம் வெள்ளென்று : ஆண்டாள் திருப்பாவை – 8


கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்


கீழ்வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் தங்கள் தொழுவத்தை விட்டகன்று மேய்ச்சலுக்குச் சென்று விட்டன. பாவை நோன்பிற்காக புறப்பட்ட பெண்களை போகாமல் தடுத்து, உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. குதிரை வடிவில் வந்த அரக்கனின் வாய்கிழித்துக் கொன்றவனை,மல்யுத்தம் புரிய வந்த அரக்கர்களை கொன்றவனை, தேவாதி தேவனை நாம்  பறை அடித்துப் பாடி வணங்கினால் நமது குறைகளைக் கேட்டு ஆராய்ந்து அருள் தருவான்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

பின்னூட்டமொன்றை இடுக