கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணேகாசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்துவாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோநாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோதேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்
கீச் கீச் என்று கருங்குருவிகள் எழுப்பும் ஒலி, பேய்ப்போல உறங்கும் பெண்ணே, உனக்கு கேட்கவில்லையா? காசு பிறப்பு ஆகிய அணிகலன்களை காசு மாலைகளையும் தங்க மணி மாலைகளையும் அணிந்த வாசம் மிக்க கூந்தலையுடைய ஆயர் பெண்கள் மத்தினைக் கொண்டு தயிர் கடையும் ஓசை, இவர்களுக்கெல்லாம் தலைவியாகிய உனக்கு கேட்கவில்லையா? நாராயணன் மூர்த்தி கேசவனை நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்பும், ஒளிவீசும் மேனியுடையவளே, படுத்திருக்கின்றாயோ? கதவை திற.
2 replies on “கீசு கீசு என்று எங்கும் : ஆண்டாள் திருப்பாவை – 7”
மிகவும் நன்று சித்தார்த்.
பேய்ப்பெண்ணே என்பதற்கு “பேதைப்பெண்ணே” என்று பொருள் கொள்ளலாம் என்று எண்ணினேன். பேய் போல் உறங்கும் என்ற உவமையும் சரியாகத்தான் இருக்கும் போல இருக்கிறது.
//காசும் பிறப்பும்//
காசுமாலையை காசு என்றும், குண்டு மாலையை பிறப்பு என்றும் சொல்கிறார்கள் என்று ஒரு சொற்பொழிவில் கேட்டிருக்கிறேன்.
நன்றி சிவராமன். பிறப்பு என்றால் தங்க மணிகளால் செய்யப்பட்ட மாலை என்கிறது அகராதி. மாற்றத்தை செய்துவிட்டேன்.