பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ! – ஆண்டாள் திருப்பாவை – 9


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்

மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் என்பாவாய்

தூய மணி மாளிகையைச் சுற்றிலும் விளக்கு எறிய, வாசனைப்புகை கமழ படுக்கையில் உறங்கும் மாமன் மகளே! மணிக்கதவினை திற.


அத்தையே! அவளை எழுப்ப மாட்டீர்களா? உங்களின் மகள் என்ன ஊமையோ? செவிடோ? நீண்ட தூக்கம் கொள்கிறாளோ? அல்லது மத்திரத்தால் கட்டுண்டு பெரும் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றாளோ?


மிகப்பெரிய மாயங்கள் செய்பவன், மாதவன், வைகுந்தன் என்று பல பெயர்களைச் சொல்லிப்பாடுகிறோம்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

2 replies on “ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ! – ஆண்டாள் திருப்பாவை – 9”

பின்னூட்டமொன்றை இடுக