பிரிவுகள்
பொது

கொஞ்சம் சுயபுராணம் (மதுமிதாவை சாக்காய் வைத்து)

வலைப்பதிவர் பெயர்: சித்தார்த். வெ

வலைப்பூ பெயர் : அங்கிங்கெனாதபடி

சுட்டி(url) : https://angumingum.wordpress.com

ஊர்: சென்னை

வசிக்கும் நாடு: குவைத்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பல துரோணர்கள். யாரையென்று சொல்ல…

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : டிசம்பர் 28, 2005

இது எத்தனையாவது பதிவு: 58

இப்பதிவின் சுட்டி(url): https://angumingum.wordpress.com/2006/06/09/formadhumitha/

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தண்ணீரில் மூழ்கியதைப்போலத் திணரிய எனக்கு ஆசுவாசமாய் மூச்சுவிட ஒரு வெளி தேவைப்பட்டதென்பதற்க்காக…

சந்தித்த அனுபவங்கள்: முதலில் அனுபவங்கள் பதிவுகளாயின, பின் பதிவுகளுக்காய் அனுபவங்களை தேட ஆரம்பித்தேன்….

பெற்ற நண்பர்கள்: எனது இணைய நண்பர்களுள் பலர் வலைப்பதிவுகளின் மூலம் அறிமுகமானவர்கள்…

கற்றவை:

  1. பதிவுகளில் தரமிருப்பின் அதை படிக்க ஒரு நிச்சயம் ஒரு வாசக்கூட்டம் இருக்கும்.
  2. ஒவ்வொரு வலைப்பூவும் அதற்கான வாசகர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. எனது பெரியதென்றும், உனது பதிவு ஆழமற்றதென்றும் கூறிக்கொள்வது நமது ஆணவத்தை மட்டும் காட்டுமேயன்றி வேறெதயும் பூர்த்தி செய்யாது.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: விலங்கிட யாருமில்லை என்பதனால் முழு சுதந்திரமே. இத்தனைப்பேர் படிக்கிறார்கள் என்ற எண்ணம் சுய தணிக்கையை தூண்டுவது மட்டும் உண்மை.

இனி செய்ய நினைப்பவை: இது வரை செய்ததை தான். என்ன, இன்னும் கொஞ்சம் சோம்பலின்றி தொடர்ந்து செய்ய ஆசை.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எனது வலைப்பூவில் இடப்பட்டுள்ள அறிமுகத்தையே இங்கும் தருகிறேன்.

பெயர் சித்தார்த். 27. மென்பொருள் பொறியாளன். குவைத்தில் வேலை. இலக்கியம், திரைப்படம், மென்பொருள். என் முப்பரிமாண உலகம் இது தான். 🙂 இந்த மூன்று பரிமாணங்களை பதிவுகளாக்க ஓர் இடம் தேவைப்பட்டது. இது அதற்கான ஓர் களம்.
மின்னஞ்சல்: neotamizhan@gmail.com

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பதிவு ஓர் மிக சக்தி வாய்ந்த ஊடகமாக மாறி வரும் வேலையில், தமிழ் வலைப்பதிவுகளின் தரம் மற்றும் விரிவு நாம் பெருமைப்படத் தக்கதாகவே உள்ளது. இதே வழியில் பயணம் செய்வோமாக…. 🙂

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

8 replies on “கொஞ்சம் சுயபுராணம் (மதுமிதாவை சாக்காய் வைத்து)”

பின்னூட்டமொன்றை இடுக