உறவின் ஆதாரம் எது? ரத்த உறவுகளின் ஊற்று தாயின் கருவறை. அங்கிருந்தே கிளர்த்தெழுகின்றன நமது உறவுகள் எல்லாம். ஆயினும் எனக்கும் என்தங்கைக்குமான உறவில் தாயின் கருவல்லாது வேறு சில காரணிகளும் உண்டு. தாயைதந்தையை தவிர மற்றனைத்தும் மனதின் உற்பத்திகளே…. நட்பு உட்பட.
நட்பு, உறவு என்பதெல்லாம் வெறும் சோற்கள். உண்மையில், மனதிற்கு தேவை ஓர் ஆசுவாசம். பாறையின் மீது விழும் என் நிழலை பார்த்து, நான் இருக்கிறேன் என உறுதி செய்துக்கொள்வது போல. நிழலுக்கு நான் எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை நட்பெனும் வெளிச்சமும், நீயெனும் நிலமும். இதன் நீட்சியாய் பலதையும் பற்றி் பேசலாம். நம் பரஸ்பர நிழலின் தண்மையில் நாம் சுகிப்பதைப்பற்றி, வேறோர் உயிர்க்கு நிழல் தரும்போதும், நாம் வெயிலில் வாட நேரும் தருணங்களைப் பற்றி, கற்பனை வெளிச்சத்தை உண்டாக்கி அதில் செயற்கை நிழல் உற்பத்தி செய்யும் மடமையை பற்றி, விழும் தன் நிழலை அங்கீகரிக்க மறுக்கும்/வெட்கும் , மனதின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழும், மென்அகங்காரத்தை பற்றி
One reply on “நான் நிழல் நட்பு”
உங்கள் நிழல் நட்பு அருமை. அயனின் நிழலும் நட்பு தேடுகின்றது. என் வலைமொட்டை மலர வைத்ததற்கு நன்றிகள்….:)