பிரிவுகள்
இலக்கியம் சமூகம் மொழிபெயர்ப்பு

Aspen எனும் முப்பரிமாண இதழ்

ஆஸ்பென் 10 இதழ்களின் பெட்டிகள்.

ஒரு கட்டுரையின் மூல வடிவை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது தான் Aspen என்ற இதழை பற்றி அறிய நேர்ந்தது. ஃபில்லிஸ் ஜான்சன் (Phyllis Johnson) என்ற பெண்மணியால் 1965ல் ஆரம்பிக்கப்பட்ட இதழ் Aspen. இவ்விதழின் சிறப்பு என்னவென்றால் இது ஒரு பல்லூடக இதழ் (Multimedia magazine). இதன் முதல் பதிப்பில் ஜான்சன் இதை “முதல் முப்பரிமாண இதழ்” என குறிப்பிடுகிறார். ஒவ்வொரு இதழும் ஒரு அட்டை பெட்டியில் வரும். இதனுள் புத்தகங்கள், சுவரொட்டிகள், ஒலித்தகடுகள், திரைப்பட சுருள்கள் என பல்வேறு வடிவங்களில் உள்ளடக்கங்கள் இடம்பெரும். 1965ல் தொடங்கி 1971 வரை 10 இதழ்கள் வெளிவந்து நின்றுவிட்டது. அப்போதைய வட அமெரிக்க, ஐரோப்பிய அறிவுஜீவிகள் பலர் இந்த இதழில் எழுதியுள்ளனர். பிரென்ச் மொழியியலாளர்/விமர்சகர் Roland Barthesன்
மிகப் புகழ்ப்பெற்ற ஆசிரியனின் மரணம் “Death of the Author” என்ற கட்டுரை ஆஸ்பெனில் தான் முதன்முதலில் இடம்பெற்றது.

இப்போது ஆஸ்பென்னின் 10 இதழ்களும் (எழுத்து, ஓவியம், ஒளி மற்றும் ஒலி வடிவ படைப்புகள் அனைத்தும்) இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

http://www.ubu.com/aspen/

ஆஸ்பென்னின் இரண்டாவது இதழில் திரைப்படத்தை குறித்த 17 சிறு கட்டுரை துணுக்குகள் இடம்பெற்றிருந்தன. அதிலிருந்து ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன்.

கவிஞன் தேவைப்படுகிறான்.

– ஜாக் கார்ஃபைன் (Jack Garfein), திரைப்பட இயக்குனர்.

இதுவரை பார்க்கப்படாத திரைப்படம் ஒன்று சமீபத்தில் திரையிடப்பட்டது – வார்ஸா கெட்டோவினில் (Warsaw Ghetto [1]) எடுக்க்கப்பட்ட படம். மிக யதார்த்தமாக, மிக உண்மையாக… பயங்கரமாய் இருந்தது. ஆரம்ப நிலை புகைப்படக்காரர்களால் 8mm மற்றும் 16mm காமிராக்களை கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. ஒரு புகைப்படத்தை போல, உண்மையின் வாக்கியமாய் இருந்தது அது. யார் எடுத்தார்கள் என்பது முக்கியமாகவே படவில்லை. ஆங்கில இயக்குனர் பீட்டர் புரூக் சற்று திரும்பி என்னிடம் கூறினார்,
“பார்த்தாயா, திரைப்படம் மேடை நாடகத்தை விட எவ்வளவு சக்திவாய்ந்தது என்று. பார்… மேடையில் இம்மாதிரியான யதார்த்தத்தை பிடிக்க இயலுமா என்ன?”. நான் சொன்னேன், ” இல்லை. இதில் ஏதோ ஒன்று இல்லை. இந்த அணிவகுப்பில் நானும் இருந்தேன்; இந்த கூட்டத்தின் அங்கமாய் நானும்
இருந்தேன். அந்த முகங்களை பாருங்கள், அங்கு நடந்துக்கொண்டிருக்கும் ஏதோவொன்றை எப்படி வெளிப்படுத்தவேண்டுமென அவற்றிக்கு தெரியவில்லை. ஆஸ்விட்சுக்குள்[2] நுழைந்து கல்லரை தோட்டத்திற்கு செல்லும் சாலையில் நடக்கையில் எங்களிடம் சொற்களே இல்லை, எதையும் வெளிப்படுத்த ஒருவருக்கும் வழிகள் இல்லை. ஷேக்ஸ்பியர் தேவைப்பட்டான், கீட்ஸ் தேவைப்பட்டான்.. கவிஞன் தேவைப்பட்டான், அதற்கு சொற்கள் தர, சிந்தனைகளை வெளிப்படுத்த.
மனித இயல்பினை பொறுத்தவரை இதுவே கலைகளின் – நமது கலைகளின் – சாரம். அது எப்படி புகைப்படமாக்கப்பட்டிருந்தாலும் சரி – கவிஞனிடம் போய் சேர வேண்டும் அது. நமக்கே புரியாதவற்றை, எப்படி வெளிப்படுத்த வேண்டும் என தெரியாதவற்றை அவன் தான் நமக்கு சொல்லிக்கொடுக்கிறான். அவன் கூறியதும், அது – வான்வெளியை கண்டுபிடித்ததை போல, ஐன்ஸ்டைனின் தத்துவத்தை போல – மிகப்பெரிய கண்டடைதல். [3]

(எனது குறிப்புகள்)

[1] – Warsaw Ghetto – போலந்தின் தலைநகரமான வார்சாவில் ஹிட்லரின் நாட்சி (Nazi) அரசு யூதர்களுக்காக ஏற்படுத்திய இருப்பிடம். ஏற்கனவே இருந்த நகரின் ஒரு பகுதியை சுற்றி உயரமான சுவரினை எழுப்பி Ghetto உருவாக்கப்பட்டது. மிக சிறிய இடமான Ghettoவினுள் போலந்து முழுவதிலும்
இருந்து ஆயிரக்கணக்கான யூதர்கள் கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

[2] ஆஸ்விட்ச் – போலந்தின் நகரமான இதில் நாட்சி படையின் முக்கியமான வதை முகாம் (Concentration camp) இருந்தது. ஆயிரக்கணக்கில் கொண்டுவரப்பட்ட யூதர்களும் மற்றவர்களும் இங்கு வைத்து கொல்லப்பட்டனர். ஓர் தொழிற்சாலையின் சீரான இயக்கத்தை போன்று இங்கு கொலைகள் நடத்தப்பட்டன.

[3] இக்கட்டுரை ஆஸ்விச் முகாமில் நடந்த நினைவுக்கூட்டத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணபடத்தை பற்றியதாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

4 replies on “Aspen எனும் முப்பரிமாண இதழ்”

நல்ல பதிவு. உங்கள் இலக்கிய ஆளுமை ரசனை அருமை. மேலோட்டமாக ஒரு சுற்று நுனிப்புல் மேயலாய்.. வித்தியாசமாக இருக்கின்றன எல்லாம். குறிப்பாய் கலாப்ரியா.. என்னை பாரதிக்குப் பிறகு என்னை பாதித்த கவிஞர்களில் ஒருவர். தமிழ்மணம் வழியாகத்தன் வந்தேன். காரணம் ஆஸ்பென் பற்றி எங்கோ படித்த ஞாபகம்… பார்த்ஸ் பற்றியவற்றில் படித்திருக்கலாம் நினைவில் இல்லை. உங்கள பதிவு் அழகாக வடிவமைக்கபட்டு்ளளது. பாராட்டுக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s