எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோசில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை
மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
இவர்கள்: ஏய் இளம் கிளியைப் போன்றவளே! இன்னுமா உறங்குகின்றாய்?
அவள் : சில்லன்று கத்தாதீர்கள் பெண்களே. இதோ வருகின்றேன்.
இவர்கள் : வாய்ப்பேச்சில் வல்லவளே ! உன் பேச்சை நாங்கள் அறிவோம்.
அவள் : நீங்கள் தான் வல்லவர்கள். நானென்றால் அப்படியே இருந்துவிட்டு போகின்றேன்.
அவள் : எல்லோரும் வந்துவிட்டார்களா?
இவர்கள் : வந்துவிட்டனர். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப்பார்த்துக்கொள். வலிய யானையை கொன்றவனை, பகைவரை அழிக்கும் வல்லமைக் கொண்டவனை, அந்த மாயனை பாடலாம் வா.
One reply on “கவிதையில் ஓர் உரையாடல் : ஆண்டாள் திருப்பாவை – 15”
ஸ்ரீ. அண்ணா கூறுவது போல உனக்கு நல்லதொரு ‘ரஸிக ஹ்ருதயம்’
http://www.koodal1.blogspot.com -ல் ‘போந்து’ ‘போந்தாரோ’ ஆகிய சொற்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.