பிரிவுகள்
இலக்கியம் மொழிபெயர்ப்பு

ஆறு சொற்களில் சில கதைகள்…

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மிக புகழ்பெற்ற ஆறு சொல் கதை ஒன்று உண்டு.

விற்பனைக்கு: குழந்தை காலணிகள். உபயோகப் படுத்தப் படாதது. (for sale: baby shoes. not used.)

இதைப் போலவே 6 சொற்களுக்குள்ளான கதைகளை எழுதச்சொல்லி தற்கால ஆங்கில அறிவியல் புனைவு, மாயாஜால மற்றும் பேய்க்கதை எழுத்தாளர்களை கேட்டது வயர்ட் (Wired) என்ற அமெரிக்க மாத இதழ். அதில் சிலவற்றை மொழிபெயர்த்துள்ளேன். கடைபிடித்த விதி இது தான். தமிழிலும் 6 சொற்களுக்குள் இருக்க வேண்டும். சரியாக ஆறு சொற்களை சில கதைகளுக்கு கொடுக்க முடியவில்லை. 5 சொற்களாக இருந்தது. எம். யுவனின் கவிதை போல “கிடை/ த்து/விட்டான்” என்று பிரித்தால் அது போங்காட்டம் ஆகிவிடும் என்பதால் அப்படியே விட்டு விட்டேன். இனி கதைகள். மூலக்கதைகளையும் கொடுத்துள்ளேன். மாற்றம் செய்ய வேண்டும் என நினைத்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி.

மற்ற கதைகளை படிக்க : http://www.wired.com/wired/archive/14.11/sixwords.html

*********

அவனுக்காய் ஏங்கினேன். கிடைத்து விட்டான். ச்ச்ச.. – மார்கரேட் ஆட்வுட்

Longed for him. Got him. Shit. – Margaret Atwood

*******

நாங்கள் முத்தமிட்டுக்கொண்டோம். அவள் உருகிவிட்டாள். துடைப்பம் கொடுங்களேன்! – ஜேம்ஸ் பாட்டிரிக் கெல்லி

We kissed. She melted. Mop please! – James Patrick Kelly

*******

கணிப்பொறி, பாட்டரி எடுத்துக் கொண்டு வந்தாயா? கணிப்பொறி?
– எயிலீன் கன்

Computer, did we bring batteries? Computer? – Eileen Gunn

*******

நான் பார்த்துட்டேன் செல்லம், ஆனாலும் பொய் சொல்லு. – ஆர்சன் ஸ்காட் கார்ட்

I saw, darling, but do lie. – Orson Scott Card

*******

பற்றி எரியும் கட்டிடங்களில், அவர்களுக்கு சிறகு முளைத்தது – க்ரெகரி மாகுவையர்

From torched skyscrapers, men grew wings. – Gregory Maguire

**********

கல்லறை வாசகம்: முட்டாள் மனிதர்கள். பூமியிலிருந்து தப்பிக்கவேயில்லை. – வெர்னான் வின்கே

Epitaph: Foolish humans, never escaped Earth. – Vernor Vinge

***********

மிகவும் அதிகமாக செலவாகிறது. மனிதனாய் இருக்க – ப்ரூஸ் ஸ்டெர்லிங்

It cost too much, staying human. – Bruce Sterling

**********

நான் உனது எதிர்காலம், குழந்தை. அழாதே. – ஸ்டீஃபன் பேக்ஸ்டர்

I’m your future, child. Don’t cry. – Stephen Baxter

**********

குருதி தோய்ந்த கைகளுடன், விடை பெறுகிறேன். – ஃப்ராங்க் மில்லர்

With bloody hands, I say good-bye. – Frank Miller

***********

டினோசர்கள் திரும்பியுள்ளன. அவற்றின் எண்ணெய் திரும்ப வேண்டுமாம். – டேவிட் ப்ரின்

Dinosaurs return. Want their oil back. – David Brin

***********

இது போதுமா? (என்று கேட்டார் சோம்பேறி எழுத்தாளர்) – கென் மெக்லியோட்

Will this do (lazy writer asked)? – Ken MacLeod

***********

காலயந்திரம் எதிர்காலத்தை அடைந்தது!!!… அங்கு யாருமே இல்லை… – ஹாரி ஹாரிசன்

TIME MACHINE REACHES FUTURE!!! … nobody there … – Harry Harrison

***********

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

2 replies on “ஆறு சொற்களில் சில கதைகள்…”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s