“அலைகடல் உயிர்க்கும் மணல்வெளி நீங்கிக் கவுந்தி துணையுடன் கண்ணகியும் கோவலனும் நடந்தனர். பின்பக்கம் நீர்முழக்கத்தை நீண்டநேரம் கண்ணகி கேட்டுக்கொண்டிருந்தாள். அவளிடன் நீலி “ஏன் அமைதி கொண்டிருக்கிறாய்?” என்றாள். “கடலோசை கேட்கிறேன்” என்றாள் அவள். “அது அலைகளின் ஓசை. கடலுக்கு ஒலியே இல்லை” என்றாள் நீலி.”
“பயிரென்பதன் பொருட்டு பிறவெல்லாம் களையப்படும் மண்ணை மருதமென்றனர் மூதாதையர். பச்சை பொலிந்து தலைகுனிக்கும் ஒவ்வொரு செடிக்கும் இறந்த களைகளின் உதிரமே உணவு.”
One reply on “ஜெயமோகனின் கொற்றவையிலிருந்து – 2”
ஆனால் அலை கடலிலிருந்து தானே உற்பத்தியாகிறது. காற்று கடலை அசைக்கிறது, அலை உண்டாகிறது, தொடர்ந்து ஓசை…