பிரிவுகள்
பொது

புகைப்படங்கள் சில…

என் தந்தை நல்ல புகைப்பட நிபுணர். சில காலம் புகைப்பட நிலையம் கூட வைத்திருந்தார் திருவண்ணாமலையில். அது அவர் பொறியாளர் ஆவதற்கு முன். எனது மற்றும் என் தங்கையின் சிறுவயது புகைப்படங்கள் மிக அருமையாக வந்திருந்தன. ஒழுங்கான பராமரிப்பின்றி அவை மிகவும் மோசமான நிலையில் இன்று. இப்போது ஒவ்வொன்றாய் கணினிக்கு ஏற்றிக்கொண்டிருக்கிறேன். அவற்றில் இருந்து சில….

அடியேன் தான். 11 மாதத்தில். (1980).

நான், சென்னை, 1980

தங்கை, கோபுரங்கள் சாய்வதில்லை அருக்காணியின் பாதிப்பில் 🙂 (1982)
தங்கை, சென்னை, 1982

அம்மா, தங்கை, நான். உதிரிப்பூக்கள் சாயல் இல்ல? 😉 (1981)

அம்மா, தங்கை, நான். சென்னை, 1981

– சித்தார்த்

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

12 replies on “புகைப்படங்கள் சில…”

அருமையான வலைத்தளம்,
தங்கள் புகைப்படங்களும் மிக்க அருமை, தாங்கள் திருவண்ணாமலையில் இருந்திருக்கின்றீரா? சொல்லவே இல்ல? சரி சரி , நல்லா இருந்தா சரி..
ஸ்ரீஷிவ்…அஸ்ஸாமிலிருந்து…

நன்றி சிவா. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை, திருவல்லிக்கேணியிலும், சேப்பாக்கத்திலும் தான். தந்தையின் ஊர் திருவண்ணாமலை. அம்மாவிற்கு மதுராந்தகம் பக்கத்தில் பொட்டங்காடு என்ற கிராமம். எங்கள் ஊரில் எடுத்த சில படங்களும் உள்ளன. அவற்றையும் இங்கு பிறகு இடுகிறேன்.

மூன்றாவது படத்துக்குப் பின்னூட்டம் இடாமல் தாண்டிப்போக நினைத்தும் முடியவில்லை…எப்படி இவ்வளவு நல்ல படங்களைப் பாதுகாக்கவில்லை ?

அருமையான புகைப்படங்கள்! அதிலும் முதலாவதும் கடைசியும் மிக அருமை.

கருப்பு பின்னணி புகைப்படங்களுக்கு அருமையாக இருக்கிறது. ஆனால், எழுத்துருவின் வண்ணம் நன்றாக அமையவில்லை. கொஞ்சம் வெளிச்சமாக இருக்க வேண்டும். எழுத்துருவின் அளவையும் அதிகரியுங்கள்.

-மதி

அறிமுகம் படித்ததும்தான் நீங்க பழைய சித்தார்த் என்பது புரிந்தது. ஜெ.மோ. பிடிக்கும்ல உங்களுக்கு…

நீங்க படிச்சது, பார்த்ததுன்னு நிறைய இருக்கணுமே. பகிர்ந்துக்கோங்க.

-மதி

தருமி மற்றும் மதிக்கு நன்றி.

இடையில் வந்த சில வருடங்களில் புகைப்படத்தை பராமரிப்பதை பற்றிய சிந்தனை கூட எழ இயலாத நிலைமை இருந்தது. இதை விட மிக முக்கிய பல விஷயங்களில் சிக்கிக்கொண்டிருந்தோம். இப்போதே அவற்றை கவனிக்க முடிந்தது.

ஜெமோ (பித்து)பிடிச்ச அதே சித்தார்த் தான் மதி. 🙂

எழுதலாம் தான். ஆனா ஜெமோ பேர எடுத்தாலே கத்திய தூக்கிகிட்டு ஒரு கூட்டம் வந்துருது. 🙂

//ஆனா ஜெமோ பேர எடுத்தாலே கத்திய தூக்கிகிட்டு ஒரு கூட்டம் வந்துருது. //

அட! நமக்குப் பிடிச்சதை நாம பகிர்ந்துகிறதுக்கெல்லாம் கத்தி தூக்குவாங்களா இல்லையான்னு பார்க்க முடியுமா? ஜெ.மோ.வை எனக்கு எல்லா விதயங்களிலும் பிடிக்கும்னு இல்லை. நீங்களும் ஒரே ஜெ.மோ.வைப்பத்தி மட்டுமே எழுதுவீங்கன்னு இல்லைதானே. 😉

நீங்க, திரும்பி எழுத வந்திருக்கிறது சந்தோஷமா இருக்கு.

-மதி

தம்பி,
அருமையானப் புகைப்படங்கள். உனது தந்தை தன் திறமையை வெளிக்கொணர்ந்திருந்தால் எங்கேயோப் போயிருப்பார். குடத்திலிட்ட விளக்குப் போல இருக்கிறார். இப்போது உங்களை நேரில் பார்க்கும்போதுதான் எவ்வளவு வித்தியாசம்?
காலம் தான் எப்படி மாறுகிறது, மாற்றுகிறது.

வாழ்த்துக்கள்.

பின்னூட்டமொன்றை இடுக