நீண்ட நாட்களுக்கு பிறகு சென்ற வாரம் எழுதிய கவிதை.
நிதர்சனம்
———–
எம்பிக்குதித்து
உடலின் எல்லையில் மோதி
கீழ் விழுந்து
மீண்டும் முயன்று
மீண்டும் தோற்று
விழுப்புண்களுடன்
புவியீர்ப்பின் கோடையில்
வாடத்தொடங்கும்
பறவை முன்
குழந்தை மனம்
– சித்தார்த்
One reply on “நிதர்சனம் – ஓர் கவிதை”
இதை இன்னும் கொஞ்சம் செதுக்கலாமோன்னு தோணுது. இன்னொருக்கா இந்த கவிதையைத் திருத்தி புதுசா ஏத்துங்க பாஸ்!