இருள் பின்வாங்கி விலகும் தகவல் முதன்முதலில் எட்டியது ஒரு பறவையை. அது தன் கூட்டத்தாரைக் கூவி எழுப்பியது. பறவைக் கூட்டத்தின் ஓசையில் மிருகங்கள் விழிப்பு கொண்டன. ஒளியை மறைத்திருந்த மாயக் கரம் விலகிக்கொண்டது. வெளிச்சம் சிறுகச் சிறுக வஸ்துக்களாக மாறிக்கொண்டே வருகிறது. கம்பிக் க்ராதியாக. ஆல மரமாக. ஊருணிக் கரையாக. வாசல் தெளிக்கும் பெண்களாக. பார்வை கொள்ளும் கண்களாக. வெளிச்சம் தன் வல்லிசையை தொடங்கிவிட்டது. வெளிச்சம் யோசனைகளாக மாறுகிறது. இருளில் இழந்திருந்த சுய அடையாளத்தை வெளிச்சத்தின் முன்னிலையில் மீட்டெடுக்கிறது பொழுது.
– யுவன் சந்திரசேகரின் “குள்ளச்சித்தன் சரித்திரம்” நாவலின் முதல் பத்தி.