பிரிவுகள்
திரைப்படம்

12 Angry Men

12 Angry Men

 “12 கோபமான மனிதர்கள்” – [12 Angry men]

1957ல் வெளி வந்த படம் இது. படம் 12 ஜூரிகளை பற்றியது. ஒரு கொலை வழக்கு. வாதங்கள் முடிந்துவிட்டன. இனி ஜூரிகள் தீர்ப்பை சொல்ல வேண்டியது தான் மிச்சம். அங்கு தான் ஆரம்பிக்கிறது படம். 12 பேரும் ஒரு அறைக்குள் செல்கின்றனர். 12 பேரும் 12 தினுசு. இங்கிருந்து அடுத்த 90 நிமிடங்கள் அந்த அறையில் தான், அந்த 12 பேருக்கு இடையில் தான் நடக்கிறது படம்.

வழக்கு மிக எளிய ஒன்று. 18-20 வயது மதிக்கத்தக்க மகன் அவனது தந்தையை கொன்றதாக தான் வழக்கு. எல்லா சாட்சியங்களும் அவனுக்கு எதிராகவே உள்ளன. ஆக ஜூரிகளுக்கு அதிக வேலை இல்லை. அப்படி தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜூரி இன்னும் 2 மணிநேரத்தில் நடக்க இருக்கும் கால்பந்து ஆட்டத்திற்கு நுழைவு சீட்டு கூட வாங்கி விடுகிறார்.

ஆனால் அந்த 12ல் ஒருவர் மட்டும் கூறுகிறார், “நமக்குள் வாக்கெடுக்கலாம்”. முதல் வாக்கெடுப்பு நடக்கிறது. 11 பேர் மகனுக்கு எதிராகவும், ஒருவர் மட்டும் ஆதரவாகவும் வாக்களிக்கின்றனர். 12 பேரும் ஒரே மாதிரி வாக்களித்தால் தான் அது தீர்ப்பு ஆகும். அது நிகழவில்லையெனில் மறுபடியும் வழக்கு வாதம், பிரதிவாதம் என இழுக்கும். 11 பேருக்கும் கோபம். இந்த ஒருவர் எப்படி தனது நியாயத்தை, தான் உண்மை என நினைப்பதை நிலைநாட்டுகிறார். எப்படி அதை மற்றவர்களுக்கு புரிய வைக்கிறார் என்பது தான் கதை. ஒரு கட்டத்தில் மிக சாதூர்யமாக பேசி, வாதம் செய்து, அதை 11 – மகனுக்கு ஆதரவு 1 மட்டும் எதிராக என கொண்டுவந்து விடுவார்.

12 பேர், ஒரே அறையில், 90 நிமிடங்களுக்கு. ஆனாலும் ஒரு நிமிடம் கூட திரையில் இருந்து பார்வையை விலக்க முடியாது. அவ்வளவு கச்சிதமான இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு.

படம் : 12 Angry Men
மொழி : ஆங்கிலம்
வருடம் : 1957
இயக்கம் : சிட்னி லூமெட்
தயாரிப்பு : ஹென்றி ஃபாண்டா

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

3 replies on “12 Angry Men”

the one who captured me in the film is Lee J Cobb. Three of the Henry Fonda films I loved to watch; one is this. The other two are, the unforgettable The Grapes of Wrath and On Golden Pond. These three showed him in three modes; Rebellious – The Grapes of Wrath, Moderate – 12 Angry Men, and Mellowed – On Golden Pond. Forget about his guick-to-gun John Ford Movies 😉

12 பேருமே மிக அருமையான பாத்திரப்படைப்பு. முன்முடிவுகள், சொந்த வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி முடிவெடுத்தலுக்கு இட்டுச் செல்கின்றன என்பது முதல், இனவெறி, ஏழை பணக்காரன், பேஸ்பால் குழுப்பிரச்சினை, வியர்க்காதவனின் வியர்வை என்று கவனிக்க ஆயிரம் விஷயங்கள் – ஒரு ரூமுக்குள் மட்டும் நடக்கிறது படம் என்பது நினைவுக்கே வரமறுக்கிறது.

அருமையான படம். பகிர்வுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s