பிரிவுகள்
பொது

ஏற்காடு இலக்கிய முகாம் 2013.

ஏற்காடு இலக்கிய முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததுமே காயத்ரி தான் ’போயேன் பா’ என்றாள். சபலம் சபலம் :)… பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காயத்ரி தான் முன்னின்று செய்தாள். நோகாமல் நோன்பிருக்கும் கலையில் தேர்ச்சி பெறுவதையே மணவாழ்வென்று உணரும் தருணங்கள் தொடர்ச்சியாக வாய்க்கின்றன. நல்லூழ்.. வேறென்ன சொல்ல… 😉 பயண நாளுக்கு முந்தைய மாலை தான் விடுப்பை உறுதி செய்தார்கள் அலுவலகத்தில். நகம் கடிக்க வைப்பதில் அப்படி ஒரு அலாதி இன்பம் என் மேலாளருக்கு. இது நான் […]

பிரிவுகள்
பொது

ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்

ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்  சதுக்கத்தின் நடுவே ஒரு மனிதன் மண்டியிட்டான் — நிற்கவும் வலுவின்றி களைத்துவிட்டானா? – அலைகழிக்கப்பட்ட வாழ்க்கை மோதி உடையும் அந்த கணத்தை அடைந்துவிட்டானா? – துக்கமெனும் சுத்தியினாலும் வலியெனும் சுழற்காற்றினாலும் தாக்கப்பட்டானா? – தாங்கொணா பாரமாகிவிட்டதா? – விடைபெரும் தருணத்தில் பாசக்கயிறுடன் நின்றது மரணத்தின் தூதுவனா? – சாத்தானா அல்லது கடவுளா? திடீரென சதுக்கத்தின் மத்தியில் ஒரு மனிதன் மண்டியிட்டான் கால்கள் துண்டிக்கப்பட்ட ஒரு குதிரையென ஆங்கில மூலம் […]