பிரிவுகள்
திரைப்படம்

பரிணீதா

அவன் பணக்காரன். அவள் ஏழை. சிறு வயது முதல் நண்பர்கள். ஏதோ ஓர் புள்ளியில் அவர்களையும் அறியாமல் அது காதலாய் மாறுகிறது. இடையில் இருவர் வாழ்விலும் வேறு யாரோ நுழைய, பொறாமை, சிக்கல், ஊடல், பிரிவு கடைசியில் சுபம். இது தான் நான் இன்று பார்த்த பரிணீதா (திருமணமானவள்)வின் கதை. மிக மிக “சாதாரனமான” கதை. சரத் சந்தர் சதோபாத்யாயவின் (தேவதாசும் இவருடைய புதினம் தான்) புதினம் படமாக்கப்பட்டு இருக்கிறது. 1914ல் எழுதப்பட்ட புதினம். 1913 நிகழ்வதாய் […]

பிரிவுகள்
திரைப்படம்

இகிரு

“இதோ தெரிகிறதே, இது தான் நமது கதாநாயகனின் ஈரலின் எக்ஸ்.ரே. இவருக்கு புற்றுநோய். மிஞ்சிப்போனால், இன்னும் ஆறு மாதங்கள். அதற்கு மேல் தாங்காது.” இப்படி தான் தொடங்குகிறது அகிரா குரசோவாவின் ஜப்பானிய படமான “இகிரு”. இகிரு என்றால் வாழ்தல் என்று அர்த்தம். 1952ஆம் ஆண்டு வெளிவந்தது. கதாநாயகன் அறுபது வயதான வத்தனாபி. ஒரு அரசு அதிகாரி. தனது மேஜையின் விளிம்பை  விட்டு அகலாத பார்வை. யார் எதை கேட்டாலும் “அதோ அந்த டேபிள்” என்னும் அந்த அக்மார்க் […]

பிரிவுகள்
திரைப்படம்

தவமாய் தவமிருந்து

தவமாய் தவமிருந்து பார்த்தேன். படத்தை பார்த்து முடித்த இக்கணம் தோன்றும் சில எண்ணங்களை பதிவு செய்யலாம் என தோன்றியது. படத்தின் முடிவில் ஓர் காட்சி. தந்தையை அடக்கம் செய்துவிட்டு சுடுகாட்டில் இருந்து இராமலிங்கமும் (சேரன்) அவனது மகனும் நடந்து வருவார்கள். நின்று அடக்கம் செய்த இடத்தை திரும்பிப்பார்க்கும் போது இராமலிங்கத்தின் உதடுகளில் மென்புன்னகை ஒன்று பூக்கும். ஓர் பரிபூரண வாழ்க்கைக்கான பரிசு அந்த புன்னகை. படம் நீளம் என்பதை முடிந்த போது கடிகாரத்தை பார்த்து தெரிந்து கொண்டேன். […]

பிரிவுகள்
பொது

அறிமுகம்

“என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்கு கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானுடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகி விடுகின்றன” – ஜெயமோகன் (வாழ்விலே ஒரு முறை, முன்னுரை) நான் பார்க்கும் திரைப்படமோ, படிக்கும் புத்தகமோ, சந்திக்கும் நபர்களோ எனக்கு தரும் அனுபவத்தின் நீட்சியாய் இப்பதிவுகள்.