பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மலையாளம் மொழிபெயர்ப்பு

ஆட்டம் – மலையாள கவிதை மொழிபெயர்ப்பு.

மரத்தில் எஞ்சியிருக்கும் கடைசி இலைக்கு பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா? வாய்க்கும். உச்சிவெயிலில் தரையில் ஒரு சிற்றெறும்பு நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம். காற்றில் ஆடியபடி தொடர்ச்சியாக எறும்பின் பாதையில் நிழலிட அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம். ஆட்டத்தின் உச்சத்தில் இலை மரத்தை விட்டு அகலலாம். அப்போதும், ஓர் குடையாய் எறும்பின் மேலேயே விழ வாய்த்தால், தாய் வந்து குட்டியை ஒளித்ததற்காக கண்சிவக்க கோபிக்கும் வரை அந்த இருப்பு தொடருமானால், அதுவே பெருமகிழ்ச்சி. – வீரன்குட்டி. மலையாள மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=9993 […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மலையாளம் மொழிபெயர்ப்பு

எளிமை – மலையாள கவிதை

எளிமை எனது இருப்பை அறிவிக்கஒரு சிறு கூவல். நான் இங்கு இருந்ததை கூற ஒற்றைச் சிறகுதிர்ப்பு இனியும் இருப்பேன் என்பதன் சாட்சியாய் அடைகாத்தலின் வெம்மை எப்படி இயல்கிறது பறவைகளுக்கு இத்தனைச் சுருக்கமாய் தங்கள் வாழ்வினை கூற? – பி. பி. இராமசந்திரன் தமிழில் : சித்தார்த். மலையாள மூலம் : http://international.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=14010

பிரிவுகள்
இலக்கியம் சிறுகதை மலையாளம் மொழிபெயர்ப்பு

இதயதேவி – வைக்கம் முகம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். 1937 முதல் 1941 வரை இவர் எழுதிய கதைகள் அடங்கிய “விஷப்பு” (பசி) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை இது. நினைவின் ஆழத்தில் புதைந்து போயிருந்த அது, நிலவொளியில் மூழ்கும் தாஜ்மஹாலென தெளிவடைகிறது இப்போது. இந்தக் காதல் கதை துக்கம் நிறைந்ததாய் இருக்கலாம். இல்லையெனில் வேறேதோ, அதன் சூட்சமத்தை பற்றி நான் ஒன்றும் விளக்கப்போவதில்லை. பிரம்மாண்டமான கட்டிடங்கள் நிறைந்த தெருக்களின் வழியே தாய் தந்தையற்ற அனாதையாய் […]