சார்பியல்வாத தமாசு…

ஐன்ஸ்டைனின் சார்பியல் வாதம்… தமாசு தமாசு.. 🙂

அமெரிக்க பத்திரிக்கையான நியூ யார்க்கரில் இடம்பெரும் கேலிச்சித்திரங்கள் புகழ்பெற்றவை. அவை இப்போது அசைபட வடிவில் பாட்காஸ்டுகளாக (Podcast) அளிக்கப்படுகின்றன. அப்படி வந்த ஒரு அசைப்படம் தான் இது. பார்த்ததும் பகிர்ந்துகொள்ள வேண்டும் போல இருந்தது… இருக்கவே இருக்கு யூடியூப். 🙂

காலச்சுவடு இலக்கிய விருதுகள் அறிவிப்பு

காலச்சுவடு 77வது இதழில் தமிழ் தீவிர இலக்கிய பரப்பின் ஆளுமைகளுக்கான விருதுப்பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. ஆனாலும் சிறுபத்திரிக்கைகாரங்களுக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தி தானுங்க 🙂 முழுசா புரியல. ஆனா புரிஞ்ச வரைக்கும் நல்லா சிரிக்க வெச்சுது.

அசல் பக்கத்தின் முகவரி : http://www.kalachuvadu.com/issue-77/virudhu.htm

விருதுப் பட்டியல்
ஆளுமையின் பெயர் விருது
ந. முருகேசபாண்டியன் இளைய தளபதி விருது
விக்கிரமாதித்யன் முதல் குடிமகன் விருது
அ. ராமசாமி மூன்றாவது மனிதன் விருது
நாஞ்சில் நாடன் நடுநிலைச் செம்மல் விருது
ரவிசுப்பிரமணியன் நன்னடத்தை விருது
பிரபஞ்சன் வெளிநடத்தை விருது
எஸ். ராமகிருஷ்ணன் ‘நான் அவன் இல்லை’ விருது
குட்டி ரேவதி இன்முகச் செல்வி விருது
சுகிர்தராணி நன்மடந்தை விருது
ரமேஷ்-பிரேம் டோபல் (தமிழ் நோபல்) விருது
அம்பை பூலான்தேவி விருது
தேவேந்திரபூபதி ஒயின் ஓரி விருது
சாரு நிவேதிதா குத்துப்பாட்டு மைனர் விருது
ஜெயமோகன் மோனத்தவம் விருது
சல்மா (எம்.எல்.ஏ?) ராணி மங்கம்மா விருது
திலகபாமா
வைகைச் செல்வி
தணிக்கைச் செல்வி(கள்)
விருது
எம். யுவன் ஜென் முனி விருது
பாவண்ணன் வள்ளலார் விருது
கண்ணன் ரஸ்புட்டின் விருது
தொ. பரமசிவன் திராவிட ஜோதி விருது
ரவிக்குமார் (எம்.எல்.ஏ?) திராவிட மாயை விருது
லீனா மணிமேகலை பயாஸ்கோப் விருது
கனிமொழி தாட்சாயணி விருது
வசந்தகுமார் தளபதி விருது
தமிழ்ச்செல்வன் திரு.வி.க. விருது
லஷ்மி மணிவண்ணன் ‘வோட்காவிலிருந்து
மாம்பட்டை வரை’ விருது
ஆர். செந்தில்குமார ஸ்ரீமான் சி.என். லக்ஷ்மிகாந்தம் விருது
அய்யனார் தலாய் லாமா விருது
சி. மோகன் சொக்கத் தங்கம் விருது
வீ. அரசு சின்ன மருது விருது
இளம்பிறை புன்னகை அரசி விருது
மனுஷ்ய புத்திரன் ஏகபுத்திரன் விருது
மாலதி மைத்ரி அன்னை தெரசா விருது
கோணங்கி நாடோடி மன்னன் விருது
எம். கோபாலகிருஷ்ணன்
க. மோகனரங்கன்
சமரச சன்மார்க்க விருது
ஆ.இரா. வேங்கடாசலபதி கருவிலே திரு விருது
தமிழச்சி நடமாடும் கவிதை விருது
காஞ்சனா தாமோதரன் தங்கத் தாரகை விருது
என்.டி. ராஜ்குமார் நாஞ்சில் கத்தார் விருது
இமையம புதினச் சிகரம் விருது
யமுனா ராஜேந்திரன் ‘சுட்டாச்சு! சுட்டாச்சு!’ விருது
சு. வெங்கடேசன் (எம்.எல்.ஏ?) எஸ்.எஸ்.ஆர். விருது
பெருமாள்முருகன சங்கர்லால் விருது
நஞ்சுண்டன் சீத்தலைச் சாத்தனார் விருது

தமிழுக்கு நோபல் – ஓர் எளிய வழி (உபயம்: பிரபஞ்சன்)

இலக்கிய உரையாடல் எப்போதும் சீரியசாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த நோபல் பரிசு பெறப்போகும் எழுத்தாளர்/கவிஞர் யார் என்ற பேச்சு வந்தது. வெளியே மழை. இரவு சில்லிட்டுக்கொண்டுவந்தது. இடம்: ஓர் அமெரிக்க மாநிலம். நம்மூர் கவிச் சக்கிரவர்த்திகள், கவிமன்னர்கள், கவிப் பேரரசர்கள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், மிட்டா மிராசுகள் பெயரைச் சொல்லி, இவர்களுக்கு ஏன் தரப்படக் கூடாது என்றார் ஒரு நண்பர். கவிதை எழுதியிருக்க வேண்டுமே என்றார் ஒருவர். திடுமென எழுந்த நண்பர் ஒருவர், 'வடவர் வாலாட்டத்தை அடக்கிக் கனக விசயர் தம் தலையில் கல்லெடுத்து வந்து கண்ணகிக்குச் சிலை செய்த தமிழர் வீரம் எங்கே போயிற்று' என்றார். தொடர்ந்து, ஸ்டாக்ஹோமின் கதவை தட்டி, நோபல் சிலையை தழுவியப்படியே படம் எடுத்துக்கொண்ட அந்தக் கவிஞருக்கு நோபல் பரிசை ஏன் தரக்கூடாது என்றார் அவர். 'என் கையில் இருந்தால் கொடுத்துவிடலாம்…. அஞ்சோ பத்தோ, ஆனால் நோபல் பரிசாயிற்றே…' என்றார் ஒரு நண்பர் பரிதாபமாக. ஆனாலும், ஐரோப்பியர்களுக்கு இந்த ஓட்டாரம் கூடாது. யாரோ, ஓர் ஆஸ்திரியப் பெண்மணிக்குத் தந்திருக்கிறார்கள் இந்த வருஷத்து நோபல் பரிசை. தமிழுக்கு நேர்ந்த அவமானம் அல்லாமல் இது வேறென்ன? 'வடவர் தம் கொட்டத்தை அடக்கிய தமிழர் வீரம் ஐரோப்பிய அகங்காரத்தை அடக்காமல் எங்கே போகும்? எங்கே போயிற்று?' என்றார் அந்த நண்பர் மீண்டும் காட்டமாக.

'மெரினா கண்ணகி சிலை எங்கே இருக்கிறதோ, அதன் காலடியில் நெளிகிறது, தேடிப் பாரும்' என்றார் ஒரு நண்பர்.

சாகித்ய அக்காதெமி, ஞானபீடம், நோபல், புலிட்சர் என்று நூற்றுச் சொச்சம் பரிசுகள் உலகில் உள. இவைகளைப் பெற என்ன வழி? நேராக, அந்தந்த அலுவலகங்களுக்கே போவது. கையில் கட்டிக்கொண்டு போகும் புத்தகங்களை மேசையில் போட்டு பரப்புவது. 'இன்னாங்கடா…. பாருங்கடா புத்தகங்கள… நூற்று இருபத்தேழு கவிதத் தொகுதி எழுதியவண்டா நானு. கொடுங்கடா எனக்கு அந்தப் பரிசை… ' என்று கர்ஜிப்பது. இது, உங்களுக்குப் பரிசை வாங்கித் தருவதற்கான ஒரு வழி. விருத்தப்பா அரசர் அவ்வாறு செய்திருக்கிறர். ஒரு சமயம் இல்லையென்றாலும் ஒரு சமயம் பரிசு விழாமலா போகும்?

– பிரபஞ்சன் (காலச்சுவடு, டிசம்பர் 2004, பக் : 72)

டக்லஸ் ஆடம்ஸின் துணுக்கு ஒன்று

கருத்து:   யாராவது இந்த பிரபஞ்சத்தின் காரணம் என்ன, எதற்காக இங்கு இருக்கிறது ஆகிய கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்துவிட்டால், அந்த கணம் இப்பிரபஞ்சம் மறைந்து, அதனிடத்தில் இன்னும் குழப்பமான, விளக்க முடியாத வேறொன்று வந்துவிடும்.

இன்னொரு கருத்து:   இது ஏற்கனவே நடந்துவிட்டது.

🙂

[டக்லஸ் ஆடம்ஸ், பிரபஞ்ச முடிவில் ஓர் உணவகம் நாவலில் (Douglas Adams in ‘The restaurant at the end of the universe’)]

Terry Pratchett – At a Glance

டெர்ரி பிரட்சட்டின் புத்தகங்களில் (பார்க்க: முந்தைய பதிவு) இருந்து சில மேற்கோள்கள். முதலில் தமிழில் மொழிபெயர்க்க முயற்சித்தேன். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த அங்கதம் தொலைந்துவிட்டதை போன்ற உணர்வு. ஆகவே ஆங்கிலத்திலேயே….

– [The tortoise] has survived while the rest of evolution flowed past it by being, on the whole, no threat to anyone and too much trouble to eat.

– Time is a drug. Too much of it kills you.

– The trouble with being a god is that you’ve got no one to pray to.

– An upturned tortoise is the ninth most pathetic thing in the entire multiverse.
An upturned tortoise who knows what’s going to happen to it next is, well, at least up there at number four.

– Seven thousand years ago Khuft had led his people …and had prayed in the desert and the gods of the place had shown him the Old Kingdom. And he had entered, yea, and taken possession thereof, that it should ever be the dwelling place of his seed. Something like that, anyway. There were probably more yeas and a few verilys, with added milk and honey.

– We’re really good at it, Teppic thought. Mere animals couldn’t possibly manage to act like this. You need to be a human to be really stupid.

– Camels have a very democratic approach to the human race. They hate every member of it, without making any distinctions for rank or creed.

– The fact is that camels are far more intelligent than dolphins. They are so much brighter that they soon realised that the most prudent thing any intelligent animal can do, if it would prefer its descendants not to spend a lot of time on a slab with electrodes clamped to their brains or sticking mines on the bottom of ships or being patronised rigid by zoologists, is to make bloody certain humans don’t find out about it.

– Teppic: “You stay here. I’ll whistle if it’s safe to follow me.”
Ptraci: “What will you do if it isn’t safe?”
Teppic: “Scream.”

– “Round everyone up. My study. Ten minutes,” said Ridcully. He was a great believer in this approach. A less direct Archchancellor would have wandered around looking for everyone. His policy was to find one person and make their life difficult until everything happened the way he wanted it to. [Footnote: A policy adopted by almost all managers and several notable gods.]

– Rincewind could scream for mercy in nineteen languages, and just scream in another forty-four.

– Trolls are usually thought to be so stupid they can count only up to 4. […] In fact, trolls traditionally count like this: one, two, three… many, and people assume this means they can have no grasp of higher numbers. They don’t realize that many can be a number. As in: one, two, three, many, many-one, many-two, many-three, many many, many-many-one, many-many-two, many-many-three, many many many, many-many-many-one, many-many-many-two, many-many-many-three, LOTS.

– The only things known to go faster than ordinary light is monarchy, according to the philosopher Ly Tin Weedle. He reasoned like this: you can’t have more than one king, and tradition demands that there is no gap between kings, so when a king dies the succession must therefore pass to the heir instantaneously. Presumably, he said, there must be some elementary particles — kingons, or possibly queons — that do this job, but of course succession sometimes fails if, in mid-flight, they strike an anti-particle, or republicon. His ambitious plans to use his discovery to send messages, involving the careful torturing of a small king in order to modulate the signal, were never fully expanded because, at that point, the bar closed.

– Eric: What are quantum mechanics?
Rincewind: I don’t know. People who repair quantums, I suppose.

😀

– சித்தார்த்