பிரிவுகள்
திரைப்படம்

பழியுணர்ச்சி – வெறுமையை நோக்கி ஓர் பயணம்.

படங்கள்: Oldboy மற்றும் Sympathy for Lady Vengeance மொழி: கொரிய மொழி (Korean) இயக்குனர்: சான்-வூக் பார்க் REVENGE is barren of itself: it is the dreadful food it feeds on; its delight is murder, and its end is despair. – Johann Friedrich Von Schiller பழியுணர்ச்சி நமது ஆதார உணர்வுகளில் ஒன்றா? இருக்குமென்றே தோன்றுகிறது. அவன் அடித்தால் திரும்ப அடிக்காதே என சொல்லத்தான் நமக்கு […]

பிரிவுகள்
திரைப்படம்

ஃ முதல் அ வரை

ஃ முதல் அ வரை முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சியில் முடியும் படங்களை பார்த்து பழகிய எனக்கு கடைசி காட்சியில் தொடங்கி முதல் காட்சிக்கு செல்லும் படங்களை பார்த்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சமூபத்தில் அது போன்ற இரு படங்களை பார்த்தேன். ஒன்று ஹாலிவுட் படமான மெமெண்டோ. மற்றது பிரென்ச் மொழி படமான திருப்ப முடியாதது ( Irreversible ). யுக்திக்காகவே யுக்தியை பயன்படுத்துவது கதைக்கு வலுவேதும் சேர்க்காது. அது வெறும் “வித்தியாசமான” படமாக மட்டுமே […]

பிரிவுகள்
திரைப்படம்

சொர்கத்தின் நிறம்

படம் : சொர்கத்தின் நிறம் (Color of Paradise) நாடு: இரான் மொழி: ஃபார்சி இயக்கம்: மஜித் மஜீதீ நடிப்பு: மொஹ்சன் ராமெசானி, ஹுசைன் மஹ்ஜுப், சாலிம் ஃபெய்சி ஆண்டு: 2000 மஜித் மஜிதியின் சொர்கத்தின் நிறம் நான் பார்த்த இரண்டாவது இராணிய படம். முதல் படம் அப்பாஸ் கிரோஸ்தமியின் “செர்ரியின் சுவை” (Taste of Cherry). ஒருவன் தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அதற்கு உதவ ஓர் ஆளை தேடுகிறான், தேடுகிறான், தேடிக்கொண்டே இருக்கிறான். படம் முடிந்து விடுகிறது. […]

பிரிவுகள்
திரைப்படம்

ராஷோமான்

“உன் உண்மைக்கும் என் உண்மைக்கும் நடுவே தான் எங்கேயோ நிஜமான உண்மை ஒளிந்திருக்கிறது” – இந்திரா பார்த்தசாரதி (அக்னி நாவலில்)   உண்மை என்பது பன்முக தன்மை கொண்டது. இருவர் பார்க்கும் ஓர் நிகழ்வு இரு வேறு உண்மைகளாகவே பதிவாகிறது. உண்மையின் இத்தன்மையை பற்றிய ஆராய்ச்சி தான் ரஷோமான். ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா குரோசாவா 1950ஆம் ஆண்டு இயக்கிய  படம். 1952ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதை பெற்று ஐரோப்பிய/அமெரிக்க  ரசிகர்கள் ஜப்பானிய […]

பிரிவுகள்
திரைப்படம்

பெருமழக்காலம்

       எனக்கு பிடித்த இயக்குனர்கள் வரிசையில் கமல் நிச்சயம் உண்டு. தமிழ் நடிகர் கமல்ஹாசன் அல்ல. மலையாள திரைப்பட இயக்குனர் கமல். இவரும் சில விஷயங்களில் நமது கமலை போல தான். பொழுதுப்போக்கு படம் எடுப்பார். திடீரென ஓர் மிக அற்புதமான ஓர் படத்தை கொடுத்துவிட்டு மறுபடியும் பொழுதுபோக்கு படங்களுக்கு சென்று விடுவார்.  ஆயாள் கத எழுதுகயானு, கிருஷ்ணகுடியில் ஒரு ப்ரணயகாலத்து,  மதுர நொம்பரக் காட்டு,  மேகமல்ஹார், ராப்பகல், கிராமஃபோன், நிறம்,பெருமழக்காலம் இவரது சில நல்ல படங்கள். பெருமழக்காலம் […]

பிரிவுகள்
திரைப்படம்

Chaos Theory – இரு திரைப்படங்கள்

கேயாஸ் தியரி (chaos theory – தமிழில் என்ன?) புனைவாளர்களுக்கு அறிவியல் துறை தந்த கொடை என்றே நினைக்கத்தோன்றுகிறது. கேயாஸ் தியரி என்றால்? ஒரு மிகச்சிறிய நிகழ்வு, காரணம்-விளைவு (cause – effect) சுழற்சியில் சிக்கி, காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சாத்தியக்கூறு உண்டு. இதை இப்படி விளக்குவார்கள் – “அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்னத்துப்பூச்சியின் சிறகசைப்பில் உண்டாகும் காற்று, காலப்போக்கில் பெசபிக் பெருங்கடலில் புயலாய் மாறலாம்.”. இதை வண்ணத்துப்பூச்சி விளைவு (butterfly effect) என்பர். […]

பிரிவுகள்
திரைப்படம்

12 Angry Men

 “12 கோபமான மனிதர்கள்” – [12 Angry men] 1957ல் வெளி வந்த படம் இது. படம் 12 ஜூரிகளை பற்றியது. ஒரு கொலை வழக்கு. வாதங்கள் முடிந்துவிட்டன. இனி ஜூரிகள் தீர்ப்பை சொல்ல வேண்டியது தான் மிச்சம். அங்கு தான் ஆரம்பிக்கிறது படம். 12 பேரும் ஒரு அறைக்குள் செல்கின்றனர். 12 பேரும் 12 தினுசு. இங்கிருந்து அடுத்த 90 நிமிடங்கள் அந்த அறையில் தான், அந்த 12 பேருக்கு இடையில் தான் நடக்கிறது படம். […]

பிரிவுகள்
திரைப்படம்

பரிணீதா

அவன் பணக்காரன். அவள் ஏழை. சிறு வயது முதல் நண்பர்கள். ஏதோ ஓர் புள்ளியில் அவர்களையும் அறியாமல் அது காதலாய் மாறுகிறது. இடையில் இருவர் வாழ்விலும் வேறு யாரோ நுழைய, பொறாமை, சிக்கல், ஊடல், பிரிவு கடைசியில் சுபம். இது தான் நான் இன்று பார்த்த பரிணீதா (திருமணமானவள்)வின் கதை. மிக மிக “சாதாரனமான” கதை. சரத் சந்தர் சதோபாத்யாயவின் (தேவதாசும் இவருடைய புதினம் தான்) புதினம் படமாக்கப்பட்டு இருக்கிறது. 1914ல் எழுதப்பட்ட புதினம். 1913 நிகழ்வதாய் […]

பிரிவுகள்
திரைப்படம்

இகிரு

“இதோ தெரிகிறதே, இது தான் நமது கதாநாயகனின் ஈரலின் எக்ஸ்.ரே. இவருக்கு புற்றுநோய். மிஞ்சிப்போனால், இன்னும் ஆறு மாதங்கள். அதற்கு மேல் தாங்காது.” இப்படி தான் தொடங்குகிறது அகிரா குரசோவாவின் ஜப்பானிய படமான “இகிரு”. இகிரு என்றால் வாழ்தல் என்று அர்த்தம். 1952ஆம் ஆண்டு வெளிவந்தது. கதாநாயகன் அறுபது வயதான வத்தனாபி. ஒரு அரசு அதிகாரி. தனது மேஜையின் விளிம்பை  விட்டு அகலாத பார்வை. யார் எதை கேட்டாலும் “அதோ அந்த டேபிள்” என்னும் அந்த அக்மார்க் […]

பிரிவுகள்
திரைப்படம்

தவமாய் தவமிருந்து

தவமாய் தவமிருந்து பார்த்தேன். படத்தை பார்த்து முடித்த இக்கணம் தோன்றும் சில எண்ணங்களை பதிவு செய்யலாம் என தோன்றியது. படத்தின் முடிவில் ஓர் காட்சி. தந்தையை அடக்கம் செய்துவிட்டு சுடுகாட்டில் இருந்து இராமலிங்கமும் (சேரன்) அவனது மகனும் நடந்து வருவார்கள். நின்று அடக்கம் செய்த இடத்தை திரும்பிப்பார்க்கும் போது இராமலிங்கத்தின் உதடுகளில் மென்புன்னகை ஒன்று பூக்கும். ஓர் பரிபூரண வாழ்க்கைக்கான பரிசு அந்த புன்னகை. படம் நீளம் என்பதை முடிந்த போது கடிகாரத்தை பார்த்து தெரிந்து கொண்டேன். […]