பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

கவிதை – ரோபர்டோ யூரோஸ்

ஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம், ஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம். ஆனாலும் இவற்றின் இணைவு நமை சுவாசிக்க செய்கின்றது. எல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல், எல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல். ஆனாலும் இவற்றின் இணைவு நமை மீண்டெழச் செய்கின்றது. எல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு, எல்லா மரணமும் இன்னொரு உரு. ஆனாலும், இவற்றின் இணைவு நமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது. – ரோபர்டோ யூரோஸ் (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து) யூரோஸின் சில […]

பிரிவுகள்
இலக்கியம் கம்பராமாயணம் சமூகம் திருக்குறள் பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது

அதிநாயகமாக்கம்

கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது. வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார் ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி, காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

வென்றவர்கள்

வென்றவர்கள் – யோ ஃபெங் எவரெஸ்ட் மீது ஏறியவர்களுள் பலர் வழியிலேயே இறக்க எஞ்சியவர்கள் சிகரமடைந்தனர். காமெராக்களை பார்த்தபடி கொடியசைத்தனர். அகில உலகமும் அறிந்துகொள்ளட்டும் உலகின் பெருஞ்சிகரம் தங்களால் வெல்லப்பட்டதை. காமெராக்கள் காட்டாது விட்டன அமைதியாய் ஓரத்தில் நின்றிருந்த ஷெர்ப்பாக்களை. அவர்கள் சுமைதூக்கிகள் வென்றவர்களாய் கருதப்படுவதில்லை இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தந்தால் சோமோலுங்மாவை* வெல்ல யாருக்கும் உதவுவார்கள் அவர்கள். சோமோலுங்மா – இமய மலையின் திபெத்திய பெயர். ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை சமூகம் மொழிபெயர்ப்பு

கவிதையினூடே காணக்கிடைக்கும் வரலாறு…

”சங்க காலக்கவிதைகள் எதை குறித்து பேசும் போதும் மனதை பற்றியே பேசுகின்றன” என்று ஜெயமோகன் சங்கச்சித்திரங்களில் எழுதி இருந்தார். சங்க கவிதைகளுக்கு மட்டுமல்ல, இதுவே கவிதைக்கான பொதுப்பண்பு. கவிதை எதை பற்றி பேசினாலும் எத்தனை போலியாக/உண்மையாக இருந்தாலும் அது கவிஞனின் மனப்பதிவு தான். கவிதையின் பாடுபொருளாக வரலாறு ஆகும் போது என்னாகிறது? கவிதைக்கு (அல்லது இலக்கியத்திற்கு) வரலாற்றின் நிகழ்வுகளல்ல… விளைவுகளே முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் நுட்பமாக வரலாறு தத்துவமாக உருமாறியே கவிதைக்குள் நுழைகிறது. சமீபத்தில் வரலாறை மையமாக […]

பிரிவுகள்
இலக்கியம்

பாரதியார் கதைகள்

தமிழ் இலக்கியவாதிகளின் வறுமைக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக பாரதி காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பாரதியாரின் கதைகளை படிக்கும் போது அவர் எவ்வளவு குதூகலமான மனிதராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. கீழ் வரும் பத்தியை பாருங்கள்… மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கடுண்டனூரதிப ராமசாமி கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். நல்ல கறுநிறம், நரைபாய்ந்த மீசை, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்குபோல் தேய்க்கப்பட்டு, நடுத்தலையில் நவடு பாய்ந்து, பின்புறம் ஒரு […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

ஒளியை நோக்கி – சீனக்கவிதை

ஒளியை நோக்கி – யோ ஃபெங் (சீனா) விளக்கை மறைவிற்கு திருப்பிவிடு இனி இருள் யாரது, விட்டில் பூச்சியை தடுத்து இருளில் வசிக்கப் பழக்குவது? முடிவற்ற பயிற்சிக்குப் பின் அதன் சிறகுகள் முறிகின்றன பறக்கவியலாது அந்தியை இழுத்தபடி நத்தையென மெல்ல ஊர்ந்து செல்கிறது ஒளியை நோக்கி ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சித்தார்த்.

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கவிதை மொழிபெயர்ப்பு

கிளிகள் – ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ

கிளிகள் – ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ. நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன. இருட்டத்துவங்கியதும் குரல் தாழ்த்தி தம் நிழலுடனும் மௌனத்துடனும் உரையாடுகின்றன. கிளிகளும் அனைவரையும் போலத்தான். நாளெல்லாம் பேச்சு இரவினில் துர்கனவுகள். அறிவார்ந்த முகத்தினில் தங்க வளையங்களும் அட்டகாசமான இறகுகளும் இதயத்துள் ஓயாத பேச்சும்…. கிளிகளும் அனைவரையும் போலத்தான். சிறப்பாய் பேசுபவை தனி கூடுகளில். ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் சிறுகதை மொழிபெயர்ப்பு

பயமறியா ஜான் – இடாலோ கால்வினோ

இடாலோ கால்வினோ இத்தாலிய இலக்கியவாதி. Invisible Cities, If on a winter’s night a traveller போன்ற நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர். Invisible Cities, தொலைந்த புலப்படாத நகரங்கள் என்ற பெயரில் (ச. தேவதாஸ் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்) தமிழில் வந்துள்ளது. இவர் எழுத்தாளராக மட்டுமல்லாது இத்தாலிய நாடோடிக்கதைகளை சேகரித்து தொகுத்து வெளியிட்டவரும் ஆவார். 1956ல் இவர் வெளியிட்ட Italian Folktales என்ற நூல் வாசிக்க கிடைத்தது. ஆங்கில நாடோடிக் கதைகளை க்ரிம் சகோதரர்கள் […]

பிரிவுகள்
இலக்கியம் சிறுகதை

பேசுதல் அதற்கின்பம் – நூல் வரலாறு

தமிழேறு பதிப்பகம் மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் இலக்கிய முன்னோடிகள் நூல் வரிசையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நூல், மு. முத்தையன் எழுதிய “பேசுதல் அதற்கின்பம்”. இந்நூல், தமிழிலக்கிய வரலாற்று நோக்கில் மிக முக்கியமான நூலாகும். அரை நூற்றாண்டு காலம் உலக இலக்கிய சூழலில் மிக முக்கியமான வடிவமாக இருந்த கலவை இலக்கியம்(1) என்ற இலக்கிய வடிவத்தின் விதையாக திகழ்ந்த நூல் இது. இந்நூலின் இலக்கிய மதிப்பீடுகள் குறித்து நிறையவே எழுதப்பட்டுவிட்டன. இந்த நூல் தமிழக இலக்கிய பரப்பில் […]

பிரிவுகள்
இலக்கியம் கடந்து சென்ற கவிதை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு

உயரத்திருந்து யாசித்தல்

பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மொத்தம் 10 பாடல்கள் (158 – 163, 207,208,237,238) எழுதியுள்ளார். இதில் முதல் பாடல் (158) குமணன் என்ற அரசனிடம் பொருள் வேண்டி பாடப்பட்ட பாடல். கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிட்டு “அவர்களெல்லாம் இறந்து விட்ட பிறகு புலவர்களெல்லாம் உன்னிடம் தான் வருகிறார்கள் என கேள்விப்பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளேன்,” என்று கூறும் யாசகப்பாடல் தான் அது. கடையேழு வள்ளல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வரலாற்று ரீதியில் முக்கியமான பாடலாக இருக்கலாம். மற்றபடி வேறெந்த சிறப்பும் […]