பிரிவுகள்
இலக்கியம்

சிதைவுகள் – சினுவா ஆச்சிபி

முல்க் ராஜ் ஆனந்தின் கதை ஒன்று. ஒரு குழந்தை தாயுடன் சந்தைக்கு போகிறது. சந்தையில் பஞ்சு மிட்டாய்களையும் ராட்டினங்களையும் கோமாளிகளையும் பார்த்து ஆச்சரியம். தாயிடம் ஒவ்வொன்றிற்காய் அழுகிறது. தாயும் பேசாம வா என்றபடி முன்னே நடக்கிறாள். குழந்தை வழி தவறி விடுகிறது. இன்னொருவர் அதை தூக்கி கொண்டு, என்ன டா வேணும் என்கிறார். அம்மா வேணும் என்று அழுகிறது. இந்த பஞ்சு முட்டாய் வேணுமா? ராட்டினத்துல போறீயா? கோமாளி பாரு, கோமாளி பாரு… உஹும்.அம்மா தான் வேணும். […]

பிரிவுகள்
இலக்கியம் பொது

இஸ்லாத்தின் பிரச்சினைகள் ஒரு மறுபார்வை – அஸ்கர் அலி எஞ்சினியர்

“இஸ்லாத்தின் பிரச்சினைகள் ஒரு மறுபார்வை”. அஸ்கர் அலி எஞ்சினியர் எழுதிய புத்தகம். தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி சிங்கராயர். மறப்பதற்கு முன்பு, மொழிபெயர்ப்பை பற்றி சொல்லி விடுகிறேன். ஒரு மொழிபெயர்ப்பு நூலை படிக்கிறேன் என்ற உணர்வே எனக்கு வரவில்லை. அதுவே மொழிபெயர்ப்பாளரின் மிகப்பெரிய வெற்றி என நினைக்கிறேன். எனக்கு மதங்களை பற்றி ஆர்வம் உண்டு. மதம் என்பது உளவியல், சமூகவியல் சம்பந்தப்பட்ட விஷயம் என நான் நம்புகிறேன். 4 வருடங்களுக்கு முன் யூத மதத்தை பற்றி படிக்க ஆரம்பித்த […]

பிரிவுகள்
இலக்கியம்

God of small things – அருந்ததி ராய்

கதை ஆரம்பித்துவிட்டதை பற்றி கவலையில்லை. ஏனெனில் கதகளி வெகு நாட்களுக்கு முன்பே, மிகச் சிறந்த கதைகளின் ரகசியத்தை தெரிந்துவைத்திருந்தது. அவற்றில் ரகசியங்கள் ஏதும் இல்லை என்பது தான் அவற்றின் ரகசியமே. சிறந்த கதைகள் யாவுமே நீங்கள் பல முறை கேட்டவை, இன்னும் கேட்க விரும்புபவை. அவற்றில் எங்கு வேண்டுமெனினும் உள்ளே நுழைந்து, சாவகாசமாக ரசிக்க ஆரம்பித்து விடலாம். விறுவிறுப்புகளையும், திடீர் திருப்பங்களையும் கொண்டு நம்மை ஏமாற்றுவதில்லை அவை. எதிர்பார்க்காதவற்றை கொண்டு நம்மை ஆச்சரியப்படுத்துவதுமில்லை. அவை உங்களுக்கு மிகவும் […]

பிரிவுகள்
இலக்கியம்

நகுலனின் ஒரு நொடிக்கதை

ஆஸ்பத்திரி. அறையில் அவன். ரண சிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள். நான்கு மணி நேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதும் தட்டிவிழித்துப் பார்த்தான். யாரும் இல்லை. மறுபடியும் தூங்கிவிட்டான். அவ்விருவரும் வெளியில் வந்தனர். முதல்வன் : ஏன்? மற்றவன் : இன்னும் சமயம் ஆகவில்லை. [ நகுலன் (ஞானரதம், அக்., 1972) ]   – சித்தார்த்

பிரிவுகள்
இலக்கியம்

ஒளி வருகை

இருள் பின்வாங்கி விலகும் தகவல் முதன்முதலில் எட்டியது ஒரு பறவையை. அது தன் கூட்டத்தாரைக் கூவி எழுப்பியது. பறவைக் கூட்டத்தின் ஓசையில் மிருகங்கள் விழிப்பு கொண்டன. ஒளியை மறைத்திருந்த மாயக் கரம் விலகிக்கொண்டது. வெளிச்சம் சிறுகச் சிறுக வஸ்துக்களாக மாறிக்கொண்டே வருகிறது. கம்பிக் க்ராதியாக. ஆல மரமாக. ஊருணிக் கரையாக. வாசல் தெளிக்கும் பெண்களாக. பார்வை கொள்ளும் கண்களாக. வெளிச்சம் தன் வல்லிசையை தொடங்கிவிட்டது. வெளிச்சம் யோசனைகளாக மாறுகிறது. இருளில் இழந்திருந்த சுய அடையாளத்தை வெளிச்சத்தின் முன்னிலையில் […]

பிரிவுகள்
இலக்கியம்

பின் தொடரும் நிழலின் குரல்

  எந்த ஒரு அமைப்பிலும், சமூகம், மதம், அரசியல் என எங்கு எடுத்துக் கொண்டாலும், அது வளர்ந்தபிறகு, மனிதாபிமானம் விலக்கிய பார்வை ஒன்று அதில் குடிகொண்டு விடுகிறது. அப்போது, உலகை மாற்றி அமைக்கும் ஓர் கனவோடு அவ்வமைப்பில் சேர்ந்த உறுப்பினன் ஒருவனது நிலை என்ன? அவனுக்கும் அந்த அமைப்பிற்குமான உறவுகள் எத்தகையவை? அவனது மனசாட்சிக்கு எந்த அளவிற்கு மதிப்பிருக்கும் அவ்வமைப்பில்? இவை குறித்தே பேசுகிறது ஜெயமோகனின் “பின் தொடரும் நிழலின் குரல்”. விஷ்னுபுரத்திற்கு பிறகு வந்த ஜெயமோகனது […]