பிரிவுகள்
இலக்கியம் பொது மொழிபெயர்ப்பு

ஆகப்பெரிய விழைவு

இன்று எதேச்சையாக The Codeless Code  என்ற நல்ல தளத்தில் சென்று முட்டினேன். Koanகள் என்றால் ஜென் மதத்தில் சொல்லப்படும் தத்துவார்த்தமான சிறு கதைகள். இந்த தளத்தில் ஓர் கணினி நிறுவனத்தில் நிகழ்வது போல சொல்லப்படும் அழகான சிறு கதைகள் உள்ளன. வெறும் கணினி வல்லுனர்களுக்கான கதைகள் அல்ல இவை… அனைவருக்குமானது. மிகவும் பிடித்த கதை ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன் : ஆகப்பெரிய விழைவு  திங்கட்கிழமையன்று ஓர் இளம் துறவி குரு பான்சனிடன் கேட்டான் : குருவே, ஆகப்பெரிய […]

பிரிவுகள்
பொது

முன்றிலில் ஒரு புதிய கட்டுரை

அணிலாடு முன்றில் குறித்து முன்னமே எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். என் மனைவி காயத்ரியும் நானும் இணைந்து எழுதும் வலைப்பதிவு. பழந்தமிழ் பாடல்களை மட்டுமே மையமாக கொண்ட கட்டுரைகள் என்பது இலக்கு. இது வரை 14 கட்டுரைகள் எழுதியுள்ளோம்.  நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு முன்றிலில் ஒரு புதிய கட்டுரையை எழுதினேன்… “நல்கார் நயவாராயினும்…”. 

பிரிவுகள்
பொது

பனிப்பொழிவிலிருந்து பறவையின்மையை…

நேற்று பி.பி.சியில் நீர்வளம் குறித்த கலந்துரையாடல். நீர்வள நிபுணர்கள், சூழலியல் அறிஞர்களிடையே ஒரு ஓவியரும் இடம்பெற்றிருந்தார். பெண். பெயர் மறந்துவிட்டது. சமூக, அரசியல் நோக்கில் மற்ற அனைவரும் பேசிய பொழுது இவர் இலக்கியத்தையும் கலையையும் முன் நிறுத்தி பேசினார். அவர் முன்வைத்த நீர் குறித்த இரு மேற்கோள்கள் இன்னும் ear wormஎன நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. When you look at your reflection in the water, do you see the water in […]

பிரிவுகள்
இலக்கியம் பொது

கதையின் கதை (அ) கொசுவத்திச்சுழற்சி :)

ஒரு விஷயத்தை பற்றி யோசித்தால் சிந்தனை அப்படியே கிளைத்து கிளைத்து வேறு எங்கோ போய் முடியும் எனக்கு. கட்டுரை எழுதுவதே கூட தோன்றியதை எல்லாம் எழுதி வைத்துவிட்டு பிறகு கோர்த்தெடுத்து தான்… ஆக என்னால் கதையெல்லாம் எழுத முடியாது என்று தெளிவாகவே தெரியும். ஆனாலும் ஒரு சின்ன உந்துதல் இருந்துகொண்டே இருந்தது, சிதறிய வடிவத்திலேயே ஒரு கதை எழுதிப்பார்த்தால் என்ன என்று… எழுத நினைத்த கதையின் கரு இது தான் : எதிர்கால தமிழ்நாடு (தனி நாடு). […]

பிரிவுகள்
பொது

இன்று…

இன்று உலகம் திறந்த வடிவங்களை (open formats) நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. உதாரணமாக, உரைகோப்புகளுக்கான அடிப்படை வடிவமாக “திறந்த ஆவண வடிவம்” (Open Document Format)  உருவாகியுள்ளது. இந்த வடிவத்திலான கோப்பை நாம் மைக்ரோசாஃப்ட் வேர்ட் நிரலினை கொண்டு உருவாக்கலாம். பின்னர் அதை ஓபன் ஆஃபிஸ் நிரலினை கொண்டு திருத்தி, ஆப்பிள் பேஜஸ் (Pages) நிரலினை கொண்டு அச்சிடலாம். நிரல்கள் வெவ்வேறாக இருந்தாலும் வடிவம் ஒன்றே. எல்லா நிரல்களும் ஒரே வகையான கோப்பு வடிவங்களை கொண்டிருந்தால் நிரல்களின் விற்பனை […]

பிரிவுகள்
பொது

மீனவர்களுக்காக…

Dear Friends, I have just read and signed the online petition: “Save Tamilnadu Fishermen” hosted on the web by PetitionOnline.com, the free online petition service, at: http://www.PetitionOnline.com/TNfisher/ I personally agree with what this petition says, and I think you might agree, too. If you can spare a moment, please take a look, and consider signing […]

பிரிவுகள்
அரசியல் சமூகம் பொது

ஈரோடுக்கு போன சென்னைவாசி. :)

சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஈரோடு சென்றிருந்த பொழுது எழுதி வைத்தது…. ****** கடந்த 20 நாட்களாக ஈரோட்டில் இருக்கின்றேன். பெரும்பாலும் வீட்டில் காயத்ரி, அமுதினியுடன். அவ்வப்போது நகர்வலம் செல்வதும் உண்டு. ஈரோட்டில் தனியாக சுற்றும் அனுபவம் இம்முறை தான் வாய்த்திருக்கிறது. சாலைகள் தங்களின் பூடகத்தன்மையை மெல்ல இழக்கத்துவங்கி விட்டன. 3 நாட்களுக்கு முன்னால் “இப்படியே நேரா போனீங்கன்னா எம்.ஜி.ஆர் சிலை நால்ரோடு வரும்… அங்க இருந்து சிக்னல் தாண்டி நேரா போனா பஸ் ஸ்டாண்ட்” என்று […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை மொழிபெயர்ப்பு

எல்லாமும் விரைகின்றன – ரோபர்ட்டோ யூரோஸ்

மணி காற்றால் நிரம்பியிருக்கிறது ஒலிக்காத போதும் பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது அசையாதபோதும் வானம் முழுதும் மேகங்கள் தனித்திருக்கையிலும் சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது யாரும் உச்சரிக்காதபோதும் எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன சாலைகளே இல்லாத போதும் எல்லாமும் விரைகின்றன அவற்றின் இருத்தலை நோக்கி – ரோபர்ட்டோ யூரோஸ் (Sixth Vertical Poetry) ஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin http://theswisslounge.blogspot.com/2010/07/roberto-juarroz.html தமிழில் : சித்தார்த் புகைப்பட மூலம் : http://www.flickr.com/photos/chemilo/3669746390/in/photostream/ மணி காற்றால் நிரம்பியிருக்கிறது ஒலிக்காத போதும் பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது […]

பிரிவுகள்
அரசியல் காந்தி சமூகம் வரலாறு

காந்தி கோட்சே கூட்டறிக்கை

காந்தி கொலை செய்யப்பட்ட போது நேரு கூறியதை போல அவர் வாழ்ந்த வாழ்வின் தருக்கப்பூர்வமான உச்சக் காட்சியாகவே (climax) அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது மரணமும் கூட ரொம்பவும் கம்பீரமாகத்தான் நிகழ்ந்தது. பலருக்கும் வாய்க்காத மரணமல்லவா அது. கடைசி ஆண்டுகளில் காந்தியும் கோட்ஸேவும் ஒரே திசையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தார்கள். கொலையை நோக்கி கோட்ஸேவும் கொலை செய்யப்படுதலை நோக்கி காந்தியும். தனது முடிவை பற்றி அவர் அறிந்தே இருந்தார். முதல்நாள் மாலை உட்படப் பலமுறை அவர் இதை […]

பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை சமூகம் மொழிபெயர்ப்பு

வியட்நாம்

  வியட்நாம் ”பொண்ணே, உன் பேர் என்ன?” ”தெரியாது.” ”உன் வயசென்ன? எங்கிருந்து வர்ர?” “தெரியாது.” ”ஏன் இந்த குழிய தோண்டின? ” “தெரியாது.” “எவ்வளவு நாளா ஒளிஞ்சிருக்க?” ”தெரியாது.” ”என் விரல ஏன் கடிச்ச?” ”தெரியாது.” ”நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்னு தெரியலையா உனக்கு? ” ”தெரியாது.” “யார் பக்கம் இருக்க நீ? ” ”தெரியாது.” “இது போர். ஏதாவது ஒரு பக்கத்த நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும்.” ”தெரியாது.” ”உன்னோட கிராமம் இன்னும் […]