
ஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம்,
ஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை சுவாசிக்க செய்கின்றது.
எல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல்,
எல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை மீண்டெழச் செய்கின்றது.
எல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு,
எல்லா மரணமும் இன்னொரு உரு.
ஆனாலும்,
இவற்றின் இணைவு
நமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது.
– ரோபர்டோ யூரோஸ் (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து)
யூரோஸின் சில கவிதைகள் இத்தளத்தில் உள்ளன : http://medusaskitchen.blogspot.com/2006/05/fleeing-toward-our-presence.html
6 replies on “கவிதை – ரோபர்டோ யூரோஸ்”
அருமை,பகிர்தலுக்கு மிகுந்த நன்றி சித்தார்த்.
அருமை.
சித்தார்த்,
அருமையாக தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் காட்சி வேறு வேறாகி விரிவடைகிறது.
And thanks for the ‘medusaskitchen’ site.
அனுஜன்யா
நன்றி குப்பன், சங்கமித்ரா [என் தங்கையின் பெயரும் இதே 🙂 ] மற்றும் அனுஜன்யா.
மிக நல்ல கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
மொழிபெயர்ப்பும் பேரழகு
ovvoru sollum oru sandhegam