இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன் முகம் செய்தேன்
முன்பு
தங்கச்சி சாயலில்
முகம் இருக்கும்
இடையில்
இவள் சாயலில் இருக்கிறது
என்றார்கள்
இந்த முறை
உறவின் அடையாளங்களில் இருந்து
கழன்று ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம் சிரித்தது.
அசாயலை
அடைவதற்கு
ஆகிவிட்டது இத்தனை காலம்.
– கல்யாண்ஜி
(கவிதைக்கு மாடலாய் நிற்பது என் மனைவி நேற்று விநாயகர் சதுர்த்திக்கு வடித்த மஞ்சள் பிள்ளையார். பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது. 🙂 அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். 😉 )
10 replies on “அசாயலை அடைந்த பிள்ளையார் ;)”
Romba nalla vanthirukku. Vazhthukkal ungal thunaiviyarukku.
பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாரே நல்ல அம்சமா வந்திருக்காரு ! 🙂
பட் பயப்படாம எலி புடிக்க போனது, ரொம்ப தைரியம்தான் யக்கோவ் :))
\\ அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். )\\
பிள்ளையாருக்கு இணையாக எலியை உருவாக்கிய அம்மணிக்கு ஒரு ஸ்பெசல் ஒ ;))
கவிதையும் அருமை 😉
நெசமாவே பிள்ளையார் போல செய்திருக்கும் காயத்ரிக்கு வாழ்த்துகள். எலி? கொஞ்சம் நவீன, கணினி எலி போல இருந்தாலும்… கவிதாயினி இல்லையா? கொஞ்சம் பூடகமாகவும் சொல்லணும்ல!
அனுஜன்யா
superaa irukku. 🙂 akkadde sollidungga. 😉
//பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது. //
ஆச்சர்யம்.. அதிசயம்.. ஆனால் உன்மை :)))))
//அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், //
அவ்வ்வ்வ்வ்வ்.. நான் பிள்ளையாருக்கு வால் வைக்க முயற்சி செஞ்சிருக்காளோனு இல்ல தப்பா நினைச்சிட்டேன் ;)))))
பிள்ளையாரை ஏற்கனவே பார்த்துட்டேன்.
கவிதையோட பார்க்கும் போது களையாத் தான் இருக்காரு.
உங்க சாயல்ல இருக்கு 🙂
பாராட்டுகள்
ஏம்ப்பா… அது எலியா இல்ல குட்டி டைனோசரா ? அவ்வளவு பெரிய வாலு… ஒருவேலை எங்க அக்கா தன்னோட வாலை எடுத்து இங்க ஒட்ட வச்சுட்டாங்களா ?
கவிதை அழகென்பதா
கணேசர் அழகென்பதா