ஒளியை நோக்கி
– யோ ஃபெங் (சீனா)
விளக்கை மறைவிற்கு திருப்பிவிடு
இனி இருள்
யாரது, விட்டில் பூச்சியை தடுத்து
இருளில் வசிக்கப் பழக்குவது?
முடிவற்ற பயிற்சிக்குப் பின்
அதன் சிறகுகள் முறிகின்றன
பறக்கவியலாது
அந்தியை இழுத்தபடி
நத்தையென மெல்ல ஊர்ந்து செல்கிறது
ஒளியை நோக்கி
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சித்தார்த்.
5 replies on “ஒளியை நோக்கி – சீனக்கவிதை”
கச்சிதமான மொழிபெயர்ப்பு சித்தார்த்..
அயல் இலக்கியத்தில் மேலும் பல படைப்புகளைக் காண ஆவல்..
நன்றி திருமால்.
thanks for sharing, nice poem
அந்தியை இழுத்தப்படி
நல்லதொரு வரி
தொடரட்டும் நற்பணி
கவிதை நன்று.எனது தளத்தில் கவிதைக்கான மாற்றுக்களை வாசிக்கலாம்.