கிளிகள்
– ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ.
நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன.
இருட்டத்துவங்கியதும்
குரல் தாழ்த்தி
தம் நிழலுடனும்
மௌனத்துடனும்
உரையாடுகின்றன.
கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
நாளெல்லாம் பேச்சு
இரவினில் துர்கனவுகள்.
அறிவார்ந்த முகத்தினில்
தங்க வளையங்களும்
அட்டகாசமான இறகுகளும்
இதயத்துள் ஓயாத பேச்சும்….
கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
சிறப்பாய் பேசுபவை
தனி கூடுகளில்.
ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்
6 replies on “கிளிகள் – ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ”
அருமை சித்தார்த் , நன்றிகள்.
முடிந்தால் தாவரங்கள், மரம் பற்றிய கவிதைகள் , கட்டுரைகளும் , தயவு செய்து.
நன்றி குப்பன். எதேச்சையாய் கண்ணில் பட்ட கவிதை இது. பிடித்ததால் மொழிபெயர்த்தேன். நீங்கள் சொன்னது போல கவிதைகளை கடக்க நேரிட்டால் மொழிபெயர்க்க முயற்சிக்கிறேன். நன்றி.
அருமையான கவிதை.
சிறப்பான மொழிப்பெயர்ப்பு
நன்றி சுந்தர்.
அருமையான மொழிபெயர்ப்பு. வார்த்தைகளை வைத்து ஜாலம் காட்டாமல் சட்டென்று ஈர்க்கிறது. பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி சித்தார்த்
unagalukku mattum eppadi ipaadi ellam………..
romba romba nallaa irukku