உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
நிற்காது ஓடும் மதம் பிடித்த யானையை உடையவனும் எதிரிகளைக் கண்டு அஞ்சி ஓடாத தோள் வலிமைக் கொண்டவனுமாகிய நந்தகோபனின் மருமகளே, நப்பின்னாய் ! நறுமனம் கமழும் கூந்தலை உடையவளே, கண் திறவாய். கோழிகள் கூவத்தொடங்கிவிட்டன பார். பந்தலின் மேல் குயில்களும் விடாது பலமுறை கூவுகின்றன.
பந்தாடுகிற விரல்களையுடையவளே! உன் கணவனின் பேர் சொல்லிப்
பாடுகின்றோம். செந்தாமரைப் போன்ற கைகளில் சீரான வளையல் ஒலிக்க வந்து கதவை திற. நாங்கள் மகிழ்வோம்.
2 replies on “உந்து மத களிற்றன் : ஆண்டாள் திருப்பாவை – 18”
அருமையான இந்த பாசுரத்தை படிக்க கொடுத்ததற்கு நன்றி
I read it many times.
Thanks a lot.