புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
கருடனின் தலைவனது கோயிலில் பறவைகள் ஓசையிடத் தொடங்கிவிட்டன. வெள்ளை நிறச் சங்கின் பெரும்சத்தம் கேட்கவில்லையா, பெண்ணே? எழுந்திரு. பூதகியின் முலை சுரந்த நஞ்சினைக் குடித்தவனை, சகடாசுரன் என்னும் அரக்கனை காலால் மிதித்துக் கொன்றவனை, பார்க்கடலில் பாம்பின் மேல் படுத்திருக்கும் மூலப்பொருளினை, உள்ளத்தில் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ‘அரி’ என ஓதும் பெரும் சப்தம் உள்ளத்துள் புகுந்து குளிர்விக்கிறதே.
5 replies on “புள்ளும் சிலம்பின காண்… ஆண்டாள் திருப்பாவை – 6”
சித் மொத்தம் 20 பாட்டில்ல ? திருவெம்பாவை ன்னும் சொல்லலாமா?
வாங்கண்ணே 🙂
மொத்தம் 30 பாட்டு அய்யனார்.
திருவெம்பாவை வேற.. அது மாணிக்கவாசகர் பாடினது.
மிகவும் எளியமையாய் வரிகள் வருகின்றன சித்தார்த். வாழ்த்துக்கள்.
ஐய்யா நல்லா எழுதி இருக்கீங்க ஆனால் இதுல வேதாந்தக் கருத்துகள் சேர்த்தா இன்னும் நல்லா இருக்கும்ம் இல்லை.
உங்களை மறுபடி 8 போட அழைக்கல
பார்க்க:
http://ayanulagam.wordpress.com/2007/07/03/8game/
நன்றி சிவராமன் மற்றும் கார்த்திக்.
கார்த்திக், அறிமுக இடுகையில் கூறியதைப்போல, நான் திருப்பாவையை கவிதையாக மட்டுமே பார்க்கிறேன். அதனால் நான் அதற்கு வேதாந்த ரீதியான விளக்கங்களை தருவது சரியல்ல, அதற்கான அறிவும் எனக்கு இல்லை.