ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
கடலை நிறைக்கக்கூடிய மழைக் கடவுளே! எதையும் நீ மறைக்காதே. கடலினுள் புகுந்து நீரை அள்ளியெடுத்துக்கொண்டு வானுக்கு சென்று, அங்கு ஊழிக்கடவுளாகிய திருமாலைப்போல் உடல் கறுத்து, அழகிய தோளினையுடைய பத்மநாபனின் கையிலுள்ள சக்கரத்தைப்போல் மின்னி, வலம்புரிச் சங்கினைப்போல் முழங்கி, அவனது வில்லிலிருந்து புறப்படும் சாரங்கம் எனப்படும் அம்பினைப்போல சாரங்கம் எனும் வில்லில் இருந்து புறப்படும்ம் அம்பினைப்போல் சரமழையாய் பொழிவாய், உலகத்தினர் வாழ. இம்மார்கழியில் நாங்களும் நீராடி மகிழ்ந்திடுவோம்
.
ஆழி – முதல் இரண்டு அடிகளில் கடல் என்ற பொருளிலும் ஐந்தாம் அடியில் சக்கரம் என்ற பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது
ஆர்த்து – நிறைந்து
3 replies on “ஆண்டாள் திருப்பாவை – பாடல் 4”
//அவனது வில்லிலிருந்து புறப்படும் சாரங்கம் எனப்படும் அம்பினைப்போல//
சாரங்கம் என்பது வில்லின் பெயர்தானே? “சாரங்கத்திலிருந்து புறப்படும் அம்பினைப்போல” என்பது சரியாக இருக்குமோ?
//சார்ங்க முதைத்த சர மழை போல்//
ஆம். மங்கி (நல்ல பேருங்க 🙂 )… சாரங்கம் என்பது இங்கு வில்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சொன்ன பிறகு படித்துப்பார்த்தபோது புரிந்தது.. மாற்றிவிட்டேன். நன்றி.
This is the one song which I like very much in Thiruppavai,
She scientifically explain how rain is forming and pouring to us.
aanmeegamum ariviyalum orusernta arpputaman padal ithu. miga elimaiyana vilakkam. great