பிரிவுகள்
திரைப்படம்

இறந்த பின் பெயர் அறிவித்தவன் (பிலிப் நொய்ரெட் குறித்து)

பிலிப் நொய்ரெட்

பிலிப் நோய்ரட் (Phileppe Noiret) இறந்துவிட்டார் என்ற செய்தி, எதேச்சையாக நேற்று இரவு செய்தித்தாளை புரட்டியபோது கண்களில் பட்டது. செய்திகள் உயிருள்ள பண்டங்கள் என்பது என் நம்பிக்கை. நான் ஒரு விஷயத்தை பற்றி அறியத் தொடங்கும் போது, அது குறித்த மேலதிக விவரங்கள்/செய்திகள் என்னை தானாக வந்து அடைகின்றன.

சரி… விஷயத்திற்கு. பிலிப் நோய்ரட் பிரஞ்ச் நடிகர். 1956ல் நடிக்கத்தொடங்கினார் என்கிறது விக்கிப்பீடியா.இப்பதிவு பிலிப்பின் வாழ்க்கையை பற்றி அல்ல. அதை கூகுள் கடவுள் யார் கேட்டாலும் அருள்வார். மாறாக, என் மனதில் பதிந்துள்ள நோய்ரெட்டை பற்றி நான் மட்டுமே கூற முடியும் என்பதனால் நீண்ட நாட்கள் கழித்து இப்பதிவு. இவர் நடித்த இரண்டே படங்களை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இரண்டுமே என்னை அழவைத்து, சிரிக்க வைத்து, கூடவே வாழவைத்து, முடிந்த பின்பும் மனதின் மூலையில் தங்கிவிட்ட படங்கள். எல் போஸ்தினோ மற்றும் சினிமா பாரடிஸோ (El Postino and Cinema Paradiso). உண்மையை சொன்னால் நான் ரசித்த இந்த நடிகர் தான் பிலிப் நொய்ராட் என்பதே எனக்கு நேற்று செய்தித்தாளின் இவரது புகைப்படத்தை பார்த்தபோது தான் தெரியும். என்னளவில் அவர் ஆல்ஃப்ரெடோவாகவும் (சினிமா பாரடிஸோ) பாப்லோ நெரூடா (எல் போஸ்தினோ) ஆகவுமே இருந்தார்.

பிலிப் ஆல்ஃப்ரெடோவாக (சினிமா பாரடிஸோ)

ஆல்ஃப்ரெடோ மற்றும் டோடோ (சினிமா பாரடிஸோ)

சினிமா பாரடிசோவில் பிலிப், ஆல்ஃப்ரெடோ என்ற Projectionist பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கும் toto என்ற சிறுவனுக்குமான உறவே படத்தின் கரு. ஒரு தலை காதலின் கணலில் தகித்துக்கொண்டிருக்கும் இளைஞனான டோடோவிற்கு சோகமான காதல் கதை ஒன்றை சொல்லும் இடம், டோடோவை கிராமத்தை விட்டு வெளியேற சொல்லும் இடம், ஒரு தெருச்சுவரில் திரைப்படத்தை காண்பிக்கும் இடம் என படம் நெடுகிலும் என்னை கவர்ந்தபடி இருந்தார். பிலிப் நோய்ரட் உலகம் முழுவதும் அறியப்பட்டது 1988ல் சினிமா பாரடிஸோவில் நடித்த பின்பு தான்.

பிலிப், பாப்லோ நெரூடாவாக (எல் போஸ்தினோ)

இவரை உலக அளவில் அறியச்செய்த மற்றொரு படம் எல் போஸ்தினோ. ஒரு இத்தாலிய கிராமத்தில் தபால்காரனாக பணிபுரியும் ஒருவனுக்கும், அவ்வூருக்கு வரும் கவிஞர் பாப்லோ நெரூடாவிற்குமான உறவை பற்றிய படம். பாப்லோ நெரூடாவாக பிலிப் நடித்திருந்தார். பார்க்க வேண்டிய படம்.

மறையும் போது தனது பெயரை எனக்கு அறிவித்த பிலிப்பின் நினைவாக…

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

4 replies on “இறந்த பின் பெயர் அறிவித்தவன் (பிலிப் நொய்ரெட் குறித்து)”

பதிவிற்கு மிகவும் நன்றி சித்தார்த்! சோகமான செய்தியைச் சொன்னாலும். 😦

இன்றும் சினிமா பாரடிஸோ படத்தை அவ்வப்போது போட்டுப் பார்க்கிறேன். ஆல்ஃப்ரெடோவும் டோடோவும் அந்தளவு மனதில் தங்கிப்போனார்கள்.

மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது. :(((

will be back later..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s