பிரிவுகள்
இலக்கியம் சமூகம் நகைச்சுவை

காலச்சுவடு இலக்கிய விருதுகள் அறிவிப்பு

காலச்சுவடு 77வது இதழில் தமிழ் தீவிர இலக்கிய பரப்பின் ஆளுமைகளுக்கான விருதுப்பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. ஆனாலும் சிறுபத்திரிக்கைகாரங்களுக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தி தானுங்க 🙂 முழுசா புரியல. ஆனா புரிஞ்ச வரைக்கும் நல்லா சிரிக்க வெச்சுது.

அசல் பக்கத்தின் முகவரி : http://www.kalachuvadu.com/issue-77/virudhu.htm

விருதுப் பட்டியல்
ஆளுமையின் பெயர் விருது
ந. முருகேசபாண்டியன் இளைய தளபதி விருது
விக்கிரமாதித்யன் முதல் குடிமகன் விருது
அ. ராமசாமி மூன்றாவது மனிதன் விருது
நாஞ்சில் நாடன் நடுநிலைச் செம்மல் விருது
ரவிசுப்பிரமணியன் நன்னடத்தை விருது
பிரபஞ்சன் வெளிநடத்தை விருது
எஸ். ராமகிருஷ்ணன் ‘நான் அவன் இல்லை’ விருது
குட்டி ரேவதி இன்முகச் செல்வி விருது
சுகிர்தராணி நன்மடந்தை விருது
ரமேஷ்-பிரேம் டோபல் (தமிழ் நோபல்) விருது
அம்பை பூலான்தேவி விருது
தேவேந்திரபூபதி ஒயின் ஓரி விருது
சாரு நிவேதிதா குத்துப்பாட்டு மைனர் விருது
ஜெயமோகன் மோனத்தவம் விருது
சல்மா (எம்.எல்.ஏ?) ராணி மங்கம்மா விருது
திலகபாமா
வைகைச் செல்வி
தணிக்கைச் செல்வி(கள்)
விருது
எம். யுவன் ஜென் முனி விருது
பாவண்ணன் வள்ளலார் விருது
கண்ணன் ரஸ்புட்டின் விருது
தொ. பரமசிவன் திராவிட ஜோதி விருது
ரவிக்குமார் (எம்.எல்.ஏ?) திராவிட மாயை விருது
லீனா மணிமேகலை பயாஸ்கோப் விருது
கனிமொழி தாட்சாயணி விருது
வசந்தகுமார் தளபதி விருது
தமிழ்ச்செல்வன் திரு.வி.க. விருது
லஷ்மி மணிவண்ணன் ‘வோட்காவிலிருந்து
மாம்பட்டை வரை’ விருது
ஆர். செந்தில்குமார ஸ்ரீமான் சி.என். லக்ஷ்மிகாந்தம் விருது
அய்யனார் தலாய் லாமா விருது
சி. மோகன் சொக்கத் தங்கம் விருது
வீ. அரசு சின்ன மருது விருது
இளம்பிறை புன்னகை அரசி விருது
மனுஷ்ய புத்திரன் ஏகபுத்திரன் விருது
மாலதி மைத்ரி அன்னை தெரசா விருது
கோணங்கி நாடோடி மன்னன் விருது
எம். கோபாலகிருஷ்ணன்
க. மோகனரங்கன்
சமரச சன்மார்க்க விருது
ஆ.இரா. வேங்கடாசலபதி கருவிலே திரு விருது
தமிழச்சி நடமாடும் கவிதை விருது
காஞ்சனா தாமோதரன் தங்கத் தாரகை விருது
என்.டி. ராஜ்குமார் நாஞ்சில் கத்தார் விருது
இமையம புதினச் சிகரம் விருது
யமுனா ராஜேந்திரன் ‘சுட்டாச்சு! சுட்டாச்சு!’ விருது
சு. வெங்கடேசன் (எம்.எல்.ஏ?) எஸ்.எஸ்.ஆர். விருது
பெருமாள்முருகன சங்கர்லால் விருது
நஞ்சுண்டன் சீத்தலைச் சாத்தனார் விருது

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

8 replies on “காலச்சுவடு இலக்கிய விருதுகள் அறிவிப்பு”

பிரபஞ்சன் வெளிநடத்தை விருது
எஸ். ராமகிருஷ்ணன் ‘நான் அவன் இல்லை’ விருது
குட்டி ரேவதி இன்முகச் செல்வி விருது
யமுனா ராஜேந்திரன் ‘சுட்டாச்சு! சுட்டாச்சு!’ விருது

🙂

ஏலவே ‘இலக்கிய மனேஜர்’ ‘இலக்கியக் கொமிசார்’ ஆகிய பெருமைகளைச் சுமந்திருக்கும் காசு கண்ணனின் காலச்சுவட்டுக் கொம்பனி, எழுத்துகளின் மீதும் எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தைகளின் மீதும் தனது கண்காணிப்பையும் அதிகாரத்தையும் தெடர்ந்து உறுதி செய்யு முகமாக எழுத்தாளர்களுக்குக் கேலிப்பட்டங்களையும் ஏளனங்களையும் நையாண்டிகளையும் ஒரு சேரக் குத்திச் சமகாலத் தமிழ் எழுத்தியக்கம் மீது தனது வன்முறையைத் தொடர்கிறது. இது ஒன்றும் காலச்சுவட்டிற்குப் புதிதில்லை. தனக்கு ஒவ்வாத தனது ஒரே குடைக் கீழ் வராத எழுத்தாளர்களிற்கு அவர்கள் சார்ந்த நிறுவனங்களிலிருந்து வேலையை விட்டுத் தூக்குவதற்கு நிர்ப்பந்தித்தல்- ஞானபாரதியையும் சங்கர ராமசுப்ரமணியனையும் தூக்கினார்கள், தளவாய் சுந்தரத்தையும் பீர் முகமதுவையும் தூக்க முயன்றார்கள்- போன்ற நாலாந்தரக் காடைத்தனத்திலிருந்து இப்போது விருதுப் பட்டியல் வரை வந்து நிற்கிறது.

எழுத்துகளினதும் எழுத்தாளர்களினதும் தன்மதிப்பு, சுயமரியாதை, சமூக மதிப்பு இவை குறித்து எவ்விதக் கரிசனையும் பொறுப்புணர்வுமின்றிய சிறுபிள்ளைத்தனமான சின்னத்தனமான சிந்தனையிது. வெளிப்பார்வைக்குப் போகிற போக்கில் வாசித்து விட்டுச் சிரித்துவிட்டுப் போய்விடக் கூடிய பக்கங்களாக இது தோன்றலாம்.. ஆனால் உள்ளார்ந்திருப்பது மோசமான அதிகாரத்தைக் கட்டவிழ்த்துவிடுகிற, சக எழுத்தாளர்களை; இவர்களை இப்படிப் பாருங்கள் என்ற சாதி மனோபாவத்திற்கொப்பான குரூர சிந்தனையிது. ஒரு நீண்ட நாள் கண்காணிப்பிலிருந்து இது பிறந்தது.

அம்பைக்குப் பூலான் தேவி விருதும்
சல்மாவிற்கு ராணி மங்கம்மா விருதும் கொடுத்து விட்டு;
லீனா மணிமேகலைக்குப் ‘பயாஸ்கோப்’ விருதும்
சாரு நிவேதிதாவிற்குக் ‘குத்துப்பாட்டு மைனர்’ விருதும்
லக்ஷ்மி மணிவண்ணனுக்கு ‘வொட்காவிலிருந்து மாம்பட்டை வரை’ விருதும் கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு ‘முதல் குடிமகன்’ விருதும் கொடுப்பதற்கு இவர்கள் யார்?
யார் கொடுத்த அதிகாரம் இது? எவருடைய முப்பாட்டன்மார் கொடுத்த அடிமை ஓலை இது?

லீனா மணிமேகலை அவர்களின் மாத்தம்மாவிலிருந்து பலிபீடம் வரையான ஏழு ஆவணப்படங்களும் பயாஸ்கோப்புகளா என்ன? லீனா மணிமேகலை இவர்களுக்கு வேறு எதைக் காட்ட வேண்டுமென்று கேட்கிறார்கள்? யாருக்கு என்ன சொல்ல வருகிறார்கள்? ‘சிலேட்’ என்னும் இலக்கிய சிற்றிதழை ஒரு பனை ஏறியின் குடும்பத்திலிருந்து வேறு யார் இங்கு நடத்த முடியும்? நடத்த வந்தார்கள்? இன்று தாழ்த்தப் பட்டோரைச் சாதி சொல்லி இழிவு படுத்த முடியாத நிலையில்; இது நவீன முறையா?

‘விருது வாங்கலியோ’ என்ற தலைப்பிட்டு எல்லோருமே இங்கு விருதுகளிற்காக ஏங்கி நிற்பதாகவும் அலைந்து கொண்டிருப்பதாகவுமான ஓர் தோற்றப்பாட்டைக் காலச்சுவட்டின் கடைசிப்பக்கம் காட்ட வருகிறது.சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் எவருமே இங்கு விருதுகளிற்காக அலைபவர்களில்லை. எழுத்துகளின் மீதும் வாசகர்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் சகமனிதர்கள் மீதும் மரியாதையுள்ளவர்கள்தான். தமது படைப்பின் பேரால் ஓர் பெருமை தம்மைத் தேடி வரும் போது அதை கவுரவப்படுத்துபவர்கள்தான்.

சிறுபத்திரிகையாளர்களின் சமூகப் பொறுப்புணர்வும் விமர்சனப்பாங்கும் மாற்றுச் சிந்தனை மரபும் கா.சு விற்குமுன் குறிப்பிடும்படியாகத்தான் இருந்தது. அதை மலினப்படுத்திச் சீரழித்து நீர்த்துப் போக வைத்ததில் இடைநிலைப் பத்திரிகை என்ற ஏமாற்றுத்தனத்தோடு “நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வாறன் ஊதி ஊதித் தின்னலாம்” என்று தனக்கு ஆதாயப்படுத்துவதை மட்டுமே கா.சு செய்து வருகிறது.

கா.சுவின் இந்த இடை நிலை வியாபாரத் தன்மையும், இலக்கியத்தின் பேரால் நடாத்தப்பட்ட நடாத்தப்பட்டுவரும் மெகா திருவிழாக்கள் களியாட்டங்கள் போன்ற இத்தன்மையும் ம.க.இ.க போன்ற சமூக விமர்சன இயக்கங்கள் முழுச் சிறுபத்திரிகை இயக்கத்தையும் இவர்களையே வைத்து நோக்குவதும், மதிப்பிடுவதும் பெருந்துயரம்.

இடதுசாரி கம்யுனிஸ்ட் பின்னணியிலிருந்து புதிய சிந்தனைகளையும்,தலித்திய பின்நவீனத்துவ சிந்தனைகளையும், புதிய மதிப்பீடுகளையும் தாங்கிவந்த வண்ணமிருக்கும் சிறுபத்திரிகைகள் வேறு.

வலதுசாரி மேற்சாதி மேட்டிமை இலக்கிய மதிப்பீடுகளுடன் வரும் தமிழ்நாடு பிராமணர் சங்கக் காலச்சுவடு வேறு.

கள்ளச்சாராயப்பட்டியும் வொட்கா.. மாம்பட்டை, குடிமகன் நையாண்டியும் இங்கு இவர்களைத் தவிர வேறு எவருக்கு வரும்?

கா.சு இப்படியான கண்காணிப்பு அதிகார நடவடிக்கைகளை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

‘என் படுக்கையறையில் யாரோ ஒழிந்திருக்கிறார்கள்..’ என்றார் ஓர் கவிஞர். (எழுத்தாளர்களின் படுக்கையறைகளில்) ஒழிந்திருப்பவர் அனேகமாக கா.சு கண்ணன்தான் என்பதை கா.சுவின் விருதுப்பட்டியல் ஆள்காட்டிச் செல்கிறது.
Sugan

நல்ல பதிப்பகத்தாரின் நற்செயலாக கருதும் செயல் இதுவல்ல .

கண்ணன் மீண்டு வருவார் . படைப்பாளிகள் மீது நல்நோக்கம் கொள்வார்

காலச்சுவடும் மாறும் மலரும் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s