வேட்டையாடு விளையாடு இன்று இரண்டாம் முறையாக பார்க்க வேண்டி வந்தது. அம்மாவை கூட்டிச்சென்றிருந்தேன் திரையரங்கத்திற்கு. நான், அம்மா மற்றும் அப்பா மட்டும் திரைப்படத்திற்கு சென்றது இது தான் முதல் முறை என நினைக்கிறேன்.
இரண்டாம் முறை பார்க்கும் போது கதை தெரிந்துவிட்டதால் வேறு விஷயங்களை கவனிக்க முடிந்தது. அப்போது தோன்றிய சில எண்ணங்கள்…
- நச்சென்ற வசனங்கள். “ஏன்?” “என்ன மணிரத்னம் பட வசனம் மாதிரி கேக்கறீங்க?” , “Back home, its called ragavan instinct”, “ராகவன், உங்களுக்கு எல்லாம் தெரியுது. ஆனா சில விஷயங்கள சொல்லாம விடறதே நல்லதுன்னு தெரியல இல்ல?” இப்படி
- படத்தொகுப்பு மிக அருமையாக வந்திருந்தது. குறிப்பாய் சொல்ல வேண்டிய இடம், flashback காட்சிகள் முடிவடையும் இடத்தில் எல்லா நிகழ்வுகளும் சீரில்லாத விதத்தில் கலந்து வரும் இடம்.
- முதல் பாடல் தேவையற்றது. அதை கூட மன்னித்துவிடலாம். ஆனால் உயிரிலே பாடல் படத்தின் வேகத்தை திடீரென நிறுத்துகிறது.
- கமலினி முகர்ஜி. ஆனந்த (தெலுங்கு) படத்தில் பார்த்தபோதே மனதை அள்ளிவிட்டார். இதில் சிறு பாத்திரத்திலேயே வந்தாலும் ஹும் ஹும் ஹும்…..
- இங்கு குவைத்தில், படத்தில் சகட்டு மேணிக்கு கத்தி வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். எங்கள் முகப்பேர் ரோடு போல எகிரி எகிரி குதிக்கிறது படம். பிரகாஷ் ராஜ் தன் மகளின் பிணத்தை பார்த்து அழும் காட்சியை விகடனில் சிலாகித்திருந்தார்கள். ஆனால் இங்க அது வெட்டப்பட்டு விட்டது. ஏன் என புரியவில்லை. tears of the sun படத்தில் மார்பகங்கள் வெட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஆப்பிரிக்க பெண்ணை காட்ட எந்த தயக்கமும் இல்லாத கத்திக்கு பிரகாஷ்ராஜின் அழுகை உறுத்தியது ஏனோ யான் அறியேன்.
- நுணுக்கமான இயக்கம். பல காட்சிகள் வசனம் இன்றி உணர்த்தப்படுகின்றன. ஜோதிகா தமிழ் பெண் என கமல் அறிந்து கொள்ள, அவரது மேஜையில் இருக்கும் சல்மாவின் “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” போதுமாக இருக்கிறது. கவிதையைப் பற்றி பேசுகையில்… ஜோதிகா விமானத்தில் “படிக்கும்” புத்தகம் நமது சக வலைப்பதிவாளர் மதுமிதா எழுதிய சுபாஷிதம் என்ற புத்தகம் தான். அப்புத்தகத்தை சென்ற முறை இந்தியா சென்ற போது வாங்கிப்படித்த உடனேயே பதிவேற்ற வேண்டும் என்று இருந்தேன். ஏனோ தவறிவிட்டது.
- படத்தில் மிக அழகாக எடுக்கப்பட்ட காட்சியாக எனக்கு பட்டது, கமல் கொலைகாரர்களை முதன்முறையாக சந்திக்கும் காட்சி. எதைத் தேடுகிறோம் என கமல் அறிந்துகொள்ளும் காட்சி. ரோலர் கோஸ்டரில் சென்றோமெனில் உச்சிக்கு சென்றபிறகு ஒரு 4 – 5 வினாடிகள் நிற்கும். அசுர வேகத்தில் கீழே இறங்கப்போவது நமக்கு தெரிந்தே காத்திருப்பதில் ஒரு குறுகுறுப்பு. அதை போன்றதொரு காத்திருப்பு இது. நல்ல கற்பனைவளம் மிக்க காட்சி இது.
- நேரம், இடம் என எல்லாமும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி துணைத்தலைப்பாக வந்து கொண்டிருந்தது. பாதி படத்தில் தமிழ் காணாமல் போய்விட்டது. வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே
- உயிரிலே பாடலில் ஜோதிகா ஆர்.எம்.கே.வி விளம்பர படப்படிப்பிலிருந்து எழுந்து வந்துவிட்டவர் போல இருக்கிறார். என்னேரமும் “எல்லா வகைப் பட்டும், ஆரெம்கேவில மட்டும்” என சொல்லுவார் என எதிர்ப்பாத்தேன்.
- காக்க காக்கவில் பயன்படுத்தப்பட்ட பல பெயர்கள் இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இளமாரன், மாயா இப்படி.
இதன் பிறகு கடைசிக்கட்ட காட்சிகளில் மூழ்கிவிட்டதால் குறிப்பெடுப்பதை நிறுத்திவிட்டேன். நல்ல படம். திரையரங்கம் போய் பாருங்க மக்கா….
10 replies on “வே.வி சில குறிப்புகள்”
—–பிரகாஷ்ராஜின் அழுகை உறுத்தியது ஏனோ யான் அறியேன்.—-
They pixleate the nude body of his daughter. There is pure emotion play and not much of sexual content there.
—–நமக்கு தெரிந்தே காத்திருப்பதில் ஒரு குறுகுறுப்பு. அதை போன்றதொரு காத்திருப்பு இது. நல்ல கற்பனைவளம் மிக்க காட்சி இது.—-
Need to see again to recollect.
இது போன்ற நல்ல படங்களை எப்போதும் இரண்டு முறை பாருங்கள்.
பார்த்துச் சொல்லுங்கள்
பார்க்கச் செல்கிறோம்.
nalla padhivu valtthukkal
நல்ல விமர்சனம் சித்தார்த். “சுபாஷிதம்” நான் இன்னும் படிக்காததால் படம் பார்த்த அன்று முதல் தேடிக்கொண்டேயிருந்தேன். உங்கள் பதிவில் விடை கிடைத்தது.
தொடர்ந்து நல்ல திரை / புத்தக விமர்சனம் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.
வே. வே. படத்தை விட உங்க்ளோட பார்வை ரொம்ப அழகா இருக்கு. நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன்… அது ஒரு த்ரில்லரா இல்லை காதல் படமான்னு எனக்குப் புரியல. இன்னும் அமெரிக்காவுல ரெண்டு வருஷம் முன்னாடி ந்டந்த கொலைகளை கமல் போய் கண்டு பிடிப்பது ந்ம்ம நாட்டுப் போலீஸை அளவுக்கு அதிகமா மதிப்பிட்டாங்களோன்னு தோணுச்சு.
இவங்களுடைய investigationலயே கொலைகாரங்களைக் கண்டு பிடிச்சுக் காட்டி இருன்தா நல்லா இருந்திருக்கும்.
ஒரு கமல் ரசிகனான எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் அதிகம் தான். suspense நீட்டிச்சிருக்கலாம்னு தோணுது….
உங்களுக்கு எப்படி?
In recent years, tamil films (not all) are glorifying ‘violence’ and v.v is one such film. Just for this reson i did’nt like it.
Shopping online e Lavoro da casa
work at home
save to shopping online
Shopping at home