காலம் – சுகிர்தராணி
வெளிச்சத்தின் உடல்
உருகி மறையும் பொழுதில்
நகரத்தில் இருந்து விலகியோடும்
கிளைச்சாலையின் இருபுறமும்
கருத்தரித்த இளமரங்கள்
பிடிமானமில்லா அந்தரத்தில்
உடல் தீண்டும் இன்பத்தை
நொடியிலுணர்ந்த பறவைகளின்
கீழிறங்கும் உதிர்ந்த இறகுகள்
ஊமத்தம் பூக்களின் நெடியையும்
பட்டாம்பூச்சியின் வண்ணத்துகள்களையும்
சுமந்தடங்கும் இளங்காற்று
எவற்றின் பாதிப்புமின்றி
மீயொலியால் வழியுணரும்
வௌவாலைப்போல்
கடந்து செல்கிறது காலம்
– சுகிர்தராணி (தொகுப்பு : இரவு மிருகம்)
4 replies on “ரசித்த கவிதைகள் – காலம் – சுகிர்தராணி”
நல்ல அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்..
அன்புடன்,
சூர்யா
துபாய்
அருமையான கவிதை. காலத்தை குறித்த வித்தியாசமான பார்வை.
கவிதை வரிகளை உள்வாங்கி.. கண் மூடி.. கற்பனையில் கவிதை வரிகளுக்கு காட்சி அமைத்து பாருங்கள்.. ஒரு கனவு போல வெளிப்படும் காட்சி.. அதுதான் நவீன கவிதைகளின் இஸம்.