இறை விலகல்
ஆழ்கடல் அமைதியிலிருந்தும்
சூர்யோதயத்திலிருந்தும்
மொட்டவிழும் நிகழ்விலிருந்தும்
பிறப்பு இறப்பிலிருந்தும்
தூண் துரும்புகளிலிருந்தும்
விஞ்ஞானத்தின் முறம் கொண்டு
விரட்டியடிக்கப்பட்ட கடவுள்
ஆதிவெடிப்பின் கணத்திலும்
முடிவிண்மைக்கு அப்பாலும்
குழந்தையின் சிரிப்பிலும்
சஞ்சரித்த படி
நாய்க்குட்டியின் கண்களின் அன்பையும்
அதன் வாலசைவில் குவிமையம் கொண்ட அன்பிற்கான தேடலையும்
கலந்த பார்வையுடன்
பார்த்துக்கொண்டிருக்கிறார்
தான் இருந்த இடத்தில் நிறைந்துள்ள பெரும்பாழை
அதில் விழத்தொடங்கியுள்ள குப்பைகளை…
– சித்தார்த்
One reply on “இறை விலகல்”
நன்றாக உள்ளது.