"…ஆனால் மக்களாட்சியும் தன்னை தானே அழித்துக்கொள்கிறது, அளவுக்கதிகமான – மக்களாட்சியால். மக்களாட்சியின் அடிப்படை கருத்து, பதவி வகிப்பதிலும் மக்கள் நல திட்டங்களை தீட்டுவதிலும் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பது தான். முதல் பார்வைக்கு இது மகிழ்ச்சியான ஒரு ஏற்பாடாகத்தெரிகிறது; ஆனால் இது அழிவுப்பாதைக்கே இட்டுச்செல்லும், ஏனெனில், சிறந்த ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கும் அறிவார்ந்த முடிவுகளை எடுப்பதற்கும் மக்களுக்கு சரியானமுறையில் கற்பிக்கப்படவில்லை." (588) "மக்களுக்கென தனியான புரிதல்கள் ஏதுமில்லை. ஆட்சியாளர்கள் கூறுவதை ஒப்பிக்கிறார்கள்." (ப்ரோடாகோரஸ், 317); "கூட்டாட்சி* எனும் ஆராவாரமான கடலில் நாடு என்னும் கப்பல் பயணப்படுவது கடினம். மேடைப் பேச்செனும் காற்று வீசும்போதெல்லாம் கப்பலின் திசை மாறியபடியே இருக்கும். இதன் முடிவு வல்லாட்சியாகவோ கொடுங்கோன்மையாகவோ தான் இருக்கும்; அதீத புகழ்ச்சியின் மீது மோகமும், "தேனுக்கான பசியும்" கொண்டலையும் இம்மக்கள் கூட்டத்திடம், வெற்றுப்புகழ்ச்சியை அள்ளித்தரும் கொள்கைகளற்ற கயவன் ஒருவன், தன்னை "மக்களின் காவலன்" என கூறிக்கொண்டு வந்து, ஆட்சியை பிடிப்பான்."
– பிளேட்டோ [ 427 கி.மு – 347 கி.மு] (குடியரசு என்ற நூலில்) (எண்கள் நூலில் அவ்வாக்கியங்களின் பகுதிகளை குறிக்கின்றன)
பிளேட்டோ சுமார் இரண்டாயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் கூறியது இது. கலர் டிவி Vs 4 கிராம் தங்கம், கிலோ 2 ரூபாய் Vs 10 கிலோ இலவசம் என நீளும் இத்தேர்தல் கூத்தை பார்க்கும்போது, வரலாறு அப்படியொன்றும் முடிந்து போனவைகளின் தொகுப்பு அல்ல, நிகழ் எதிர் காலங்களுக்கான பாடப்புத்தகம் என தோன்றுகிறது.
* – ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்ட சொல் Mob-Rule. கூட்டாட்சி அதன் சரியான மொழியாக்கம் அல்ல என நினைக்கிறேன். இருப்பினும் வேறு சரியான சொல் கிடைக்கும்வரை… கிறது.
One reply on “பிளேட்டோவும் மே 8ம்”
amazing that he could guess all these at that point of time..