பலிபீடக் குறிப்புகள்
திசைப்பறவை குடியொன்றின் உறைவிடம்.
ஆதவனின் கதிர்கொண்டு
உயிர்க்காற்றை உருவாக்கும்
ரசவாதக் கூடம்.
காட்டாற்று வெள்ளத்தில்
மண்காக்கும் அரண்.
தேடி வரும் உயிர்க்கெல்லாம்
கனி தரும் உணவகம்.
ஆயினும் அது ஒரு மரம் தான்.
தயங்காமல் வெட்டு.
– சித்தார்த்.
5 replies on “பலிபீடக் குறிப்புகள்”
—ஆதவனின் கதிர்கொண்டு
ஓர்காற்று பிரிதாகும்
ரசவாதக் கூடம்.—
ஹ்ம்ம்ம்!!!
ஆய்தமேந்தியவன் குறிப்பு நன்றாக பொருந்தியது..
இது அதை விட நன்றாக வந்திருக்கின்றது
வணக்கம் சித்தார்த்,
இன்று தான் உங்கள் கவிதைகளை காண நேர்ந்தது. இக்கவிதை மிக சிறப்பாக வந்துள்ளது. சொல்லிய விதம் மிக அழகு. வாழ்த்துக்கள்
சித்தார்த், ‘ஆயினும் உனக்கது வெறும் மரம் தான்’ என இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து
//ஆயினும் அது ஒரு மரம் தான்.
தயங்காமல் வெட்டு.//
அட…உங்களுக்கும் மரம் பிடிக்குமா!! கோபம் தெரிகிறது வார்த்தைகளில்.