சில மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்தேன். இரு நண்பர்களுடன். ஒருவன் முஸ்தஃபா. இரான் நாட்டை சேர்ந்தவன். மற்றவன் ஹாஷிம். குவைத்தி. நல்ல பயணமாக அமைந்தது. அரேபியர்களின் கண்களை கொண்டு துபாயை பார்த்தது வித்தியாசமான அனுபவம். அந்த பயணத்தின் போது ஒரு நாள் இரவு நானும் முஸ்தஃபாவும் வேறு வேலையே இல்லாததால் கிளம்பி திரையரங்கிற்கு சென்றோம். முஸ்தஃபாவிற்கு அதிரடி படம் பார்க்க வேண்டும். எனக்கோ நல்ல Dramaவாக இருக்கவேண்டும். கடைசியில் நான் தான் வென்றேன். (அவனே வென்றிருக்களாம். விதி யாரை விட்டது).
woodsman என்ற படத்தை தேர்ந்தெடுத்தோம். படத்தின் விளம்பரப்பலகையில் இருந்த அழகியல் இழையோடிய புகைப்படங்களை மட்டுமே நம்பி திரையரங்கிற்குள் நுழைந்தோம். வித்தியாசமான கதாநாயகன் பாத்திரத்துடம் மிக மிக darkஆன ஒரு படமாய் அது வளர்ந்தது. படத்தின் நாயகன் ஒரு pedophile. அதற்காய் 10 ஆண்டு கால சிறைதண்டனை அனுபவித்துவிட்டு மீண்டும் சமூகத்தினுள் நுழையும் இடத்தில் தான் படம் தொடங்குகிறது. அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் படம். அவன் ஒரே நேரத்தில் இரு வகையான தாக்குதல்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று அவனுள் நோயென கிளர்த்தெழும் அந்த தீய இச்சையை. மற்றது சமூகம் அவனை பார்க்கும் சந்தேகப்பார்வையை.
எந்த ஒரு படைப்பும் முழுமை கொள்வதில் அதன் வாசகனுக்கு/பார்வையாளனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஜெயமோகனின் நாவல்களில் வரும் உச்சக்கட்ட உணர்வுப்பூர்வமான பகுதிகளை என்னுள்ளும் அந்த பைத்திய நிலையை தொட்ட கணங்களிலேயே என்னால் ரசிக்க முடிந்துள்ளது (உம்: பின் தொடரும் நிழலின் குரலில் முதல் முறையாக பிச்சையெடுக்கும் கணம், கொற்றவையில் பாலை நிலத்தில் கன்னிதெய்வத்தின் முன் பலி கொடுக்கும் இடமும் அதை தொடரும் அந்த கன்னியின் வாழ்க்கை சித்திரமும்). யோசித்துப்பார்க்கிறேன். பொருளாதார அடிப்படையில் நடக்கும் நிகழ்வுகளே நமக்கு யதார்த்தமாய் தோன்றுகிறது. இந்த நோக்கை மட்டுமே வைத்துக்கொண்டு, உச்சக்கட்ட மன எழிற்சியின் விளைவான தனிமனித மதமாற்றத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? "காசு வாங்கிட்டு மாறிட்டான்" என்ற வரியில் தான் இந்த அவதானிப்பு முடியும் என தோன்றுகிறது. உளருகிறேன். சொல்ல வந்தது இதை தான். எந்த ஒரு நிகழ்வையும் அந்த நிகழ்வு நிகழ்த்தப்பட்ட அந்த மனநிலையை ஓரளவேனும் அடைந்தாளன்றி அறிதல் சாத்தியமில்லையென தோன்றுகிறது. இம்மனநிலையை உருவாக்குவது தான் படைப்பாளியின் சவால்.
woodsman படம் பார்க்க சென்ற அந்த நாள் காலை முதலே ஏதோ ஒரு depression என்னுள். ஏன் என தெரியாமலேயே ஒரு மனச்சோர்வு நிலை. இந்த மனநிலையில் நான் அதிரடி அடிதடி படத்திற்கே போய் இருக்கவேண்டும் அதுவே இம்மனநிலைக்கு மருந்தாக இருந்திருக்கும். இந்த இருண்மையான படத்தை தேர்ந்தெடுத்தது மிக மிக தவறான முடிவு. இது படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களில் தெரிந்து விட்டது. என்னால் அந்த கதாநாயகனின் மனநிலையை முழுவதுமாய் உணர முடிந்தது. அவன் படும் இன்னல்களை எனது மனம் பட்டது. அவனது pedophile குற்றத்தை ஒரு நோயாகவே என்னால் பார்க்க முடிந்தது. அவனை மனநல மருத்துவமணைக்கே அனுப்பி இருக்கவேண்டும். சிறைக்கு அல்ல. அவனுள் நிகழும் அந்த இரு போர்கள் – ஒன்று அவனுடனும், மற்றது சமூகத்துடனும் – என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியவில்லை. pedophileஐ நியாயப்படுத்தி இருந்தால் படத்தை வெறுக்க ஒரு சாக்கு கிடைத்திருக்கும். ஆனால் படம் அதை ஒரு நோயாகவே பார்க்கிறது. அங்கு அமர முடியவில்லை. எழுந்து வெளியே வந்துவிட்டேன். முஸ்தஃபாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன்? என திரும்ப திரும்ப கேட்டான். என்ன பதில் கூற அவனுக்கு? மிகவும் பாதித்தது என்றேன். வெறும் படம் தானே என்றான் அவன். வேறோர் மனநிலையில் எனக்கும் அப்படியே தோன்றி இருக்கும். இருந்தாலும் அன்று உறக்கமின்றி போனது.
ஹோட்டலுக்குள் நுழையும்போது முஸ்தஃபா சொன்னான். நீங்கள் இந்தியர்கள் எல்லாம் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று. இதை ஒரு இராணி சொல்லி நான் கேட்கவேண்டி இருக்கிறது. நிலைமை. 🙂
4 replies on “சினிமாவுக்கு போன சித்தார்து…”
சித்தார்த்
வேறுவழியில்லை
அதுதான் நம்ம நிலமை.
pedophile குறித்த புரிதல்கள் சாத்தியப்படவேண்டும்
What the Iranian said is 100 o/o true. This emotional state is fully utilised in our country by the politicians film making people. Have you now-a-days view a Tamil film which leads and induces to think. The politicians also for their share make us emotional in language crisis and make us not to learn other languages and to have aversion towards other languages; but their off-springs had learnt the forbidden languages and had become a leader in the political industry. LANGUAGES ARE CREATED BY SOCIAL UPLIFTERS TO EXPRESS ONE’S IDEA TO MAKE OTHERS TO UNDERSTAND BY CODE OF SOUNDS. THE OTHER PERSON FAMILIAR TO THESE SOUNDS DECODE THE MESSAGE AND UNDERSTANDS THE OPINION EXPRESSED BY HIS OPPONENT. IF THIS SCIENTIFIC FORMULA IS KNOWN THERE WILL NO HATRED TO ANY LANGUAAGES. VAZHGA VALAMUDAN -THANGAM
இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
என்னமோ துபாய்ன்னு சொன்னப்ப அட தம்பி துபாய் பயணக்கட்டுரைதான் எழுதப் போறாரோன்னு நெனச்சேன். அப்புறம் பாத்தா காட்டு மனிதனோ ஏதோ ஒண்ணெப் பத்தில் எழுதியிருக்காரு. பேசாமெ அடிதடி படத்துக்கு போயிருக்கலாம்னு வேறெ புலம்பல். அலோ அதுக்கு எதுக்கு துபாய் போகணும். இப்பத்தான் ஆளாளுக்கு அடிதடியிலெ எறங்கிடறாங்களே. ஆதி, பரமசிவன் அப்படி இப்படீன்னுட்டு.
சரி அடிக்க வராதே, இதோ ஜூட்
nice writeup Siddharth.
//நீங்கள் இந்தியர்கள் எல்லாம் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று. இதை ஒரு இராணி சொல்லி நான் கேட்கவேண்டி இருக்கிறது. நிலைமை. //
:))
-Mathy