இன்று புரட்டிக்கொண்டிருந்த புத்தகம் பெயரற்ற யாத்ரீகன் – ஜென் கவிதை தொகுப்பு. தொகுப்பும் மொழிபெயர்ப்பும் யுவன் சந்திரசேகர். உயிர்மை பதிப்பகம் வெளியீடு.
ஜப்பானிய கவிதை என்றாலே அது ஹைக்கூ மட்டுமே என நினைத்திருந்தேன். ஆனால் அதையும் தாண்டி அங்கோர் உலகம் உள்ளது. அதன் விளிம்புகள் மட்டுமே இப்போதைக்கு என் கண்களுக்கு…
ஹைக்கூவை போன்ற இலக்கண கட்டுப்பாடுகள் ஜென் கவிதைகளில் இல்லை. இப்புத்தகத்தின் பின்னூட்டமாய் கொடுக்கப்பட்டுள்ள ஜென் கவிஞர்/குரு ஸுங் லான் அவர்களது பேட்டியிலிருந்து…
“ஜென் என்பதன் பொருள், பெயருடனோ, வடிவத்துடனோ பற்றுக்கொள்ளாதே என்பது. எல்லாவற்றையும் தரிசி. எந்த ஒரு குறிப்பிட்ட தேசத்துடனும், மக்களுடனும், வடிவங்களுடனும், சந்தர்ப்பங்களுடனும், சூழ்நிலைகளுடனும் பற்றுக்கொள்ளாதே. அவற்றுடன் இசைந்து ஒன்றாகிவிடு. அதன் பின், ஒரு கருத்துத் தோன்றும். அதுதான் கவிதை. அதுவே தான் கவிதை. சரியா? எதையும் உருவாக்குவதில்லை என் கவிதை. தேளிந்த பார்வை, தெளிந்த கேட்டல், தேளிந்த எண்ணவோட்டம் இவற்றின் பெறுபொருள் தான் அது“
தொகுப்பிலிருந்து சில கவிதைகள்:
என் கவிதைகளை
தெற்கத்தியப் போஸி மலர்களுக்குப்
பண்ட மாற்றாய் விற்கச்
சம்மதித்திருந்தேன். மிகச்
சமானமான விலைகொண்டவையாய்த்
தென்பட்டன இரண்டும்.
வியாபாரமும் நடந்தது. பிறகுதான்
விசனமுற்றேன்.
எழுதுகோலில் மலர்வது
இலையுதிர்காலத்துக்கு அப்பாலும்
நறுமணம் கூட்டும்
* யுவான் மெய் (பெண், சீனா, ? – 1798)
வெள்ளிப் பனித்
துளிகளிலும்
இப்படியேதான்,
சிறியதைப் பெரியது
உட்கொண்டு விடுகிறது
* கோபயாஷி இஸ்ஸா
திருடன்
விட்டுச் சென்றிருக்கிறான் –
ஜன்னலிலுள்ள
நிலவை
* ட்டுகு ரியோக்கன்
எல்லாருக்கும் தெரியும் என்னை:
மின்னல் தேவனின் மகன் நான்.
இடித் தேவியின் மருமகன்.
மேலான சொர்க்கத்தில்
வசிப்பபன்தான் நான்.
கயிறு அறுந்த காரணத்தால்
மனிதனாக இருக்கிறேன்
* வியட்நாமிய நாடோடிப் பாடல்
சடாரென்று அறையும் காற்றில்
கடைசி இலை
முடிவெடுக்கிறது :
போய்விட்டது
* ராபர்ட் ஹென்றி ப்போலின்
3 replies on “பெயரற்ற யாத்ரீகன் – ஜென் கவிதைகள்”
not bad…
two things about ur blog that attracts me… 1) tamil 2) refreshing
in a world polluted with news about google, google and more google and not to mention, crappy cinema, such alternate tastes are hard to spot!
என்னை மிகவும் ஈர்த்த கவிதைத்தொகுப்பு இது. நன்றி சித்தார்த்.