மலையாள மூலம்: எம் கோவிந்தன்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஜெயமோகன்
நானும் சைத்தானும்
———————————
தேவனுக்கு உரியதை தேவனுக்கும்,
தேசத்திற்கு உரியதை அதற்கும்,
தந்துவிட நான் முன் வந்த போது
ஒருவன் என்முன் வந்து கூறினான் :
‘எனக்கு உரியதை என்னிடம் கொடு.’
‘யார் நீ’ என்றேன்
‘தெரியாதோ சைத்தானை’ என்றான்
‘அப்படியென்றால் கேட்டுக் கொள்,
என்னுடையது எல்லாமே எனக்கு மட்டும்
என்பதுவே இன்று முதல் எனது வேதம்!’
சைத்தான் உரக்கச் சிரித்தான்.
என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான்
என் காதில் மெல்ல சொன்னான்
‘எனக்கு வேண்டியதைத்தான் தந்தாய் நன்றி’.
[தற்கால மலையாள கவிதைகள்,
தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ஜெயமோகன்,
கனவு பதிப்பகம்]
– சித்தார்த்