பிரிவுகள்
இலக்கியம் மொழிபெயர்ப்பு

காந்தியும் கவிதையும் – க. சச்சிதானந்தன்

சச்சிதானந்தன்

மலையாள மூலம் : க. சச்சிதானந்தன்
மொழிபெயர்ப்பு : சித்தார்த்
காந்தியும் கவிதையும்
———————————–

ஒரு நாள் மெளிந்த கவிதையொன்று
காந்தியை காண்பதற்கு ஆசிரமம் சென்றது.
குனிந்தபடி ராமனை சென்றடைய
நூலை நூற்றுக்கொண்டிருந்தார் காந்தி.
தான் ஒரு பஜனையாய் பிறக்காததை எண்ணி வெட்கி
கதவருகே நின்றிருந்த கவிதையை
காந்தி கவனிக்கவில்லை.
தொண்டை செருமிய கவிதையை,
நரகத்தை கண்டு வந்த கண்ணாடியினால் பக்கவாட்டில்
பார்த்தவாறு கேள்விகளை ஆரம்பித்தார்:”எப்போதாவது நூல் நூற்றிருக்கிறாயா நீ?”
“தோட்டியின் வண்டியை இழுத்திருக்கிறாயா?”
“காலையில் சமையலறையில் புகையின் நடுவே நின்றிருக்கிறாயா?”
“எப்போதாவது பட்டினி கிடந்திருக்கிறாயா?”கவிதை சொன்னது:
“பிறந்தது காட்டில், ஒரு வேடனின் வாயில்.
வளர்ந்தது மீனவனின் குடிலில்.
இருந்தும் நான் உழைத்ததில்லை.
பாடவதை மட்டுமே செய்திருக்கிறேன்.
முன்பு அரசவையில் பாடியபோது,
பருமனும் அழகும் இருந்தன என்னிடம்.
இன்று நடுவீதியில் அரைவயிறுடன்.”

காந்தி மெல்லிய புன்னகையுடன் சொன்னார் :
“அது நல்லது.
ஆனால் நீ சமஸ்கிருதத்தில் பேசும் வழக்கத்தை
விட்டொழிய வேண்டும்.
வயல்களுக்குச் செல்.
விவசாயிகளில் மொழியை கேள்”

கவிதை ஒரு விதையாகி
வயலிலே காத்திருந்தது,
புது மழையில் நிலம் உழ வரும்
உழவனுக்காய்.

[மலையாளம் கற்றுக்கொண்ட பிறகு நான் செய்த முதல் மொழிபெயர்ப்பு]

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

One reply on “காந்தியும் கவிதையும் – க. சச்சிதானந்தன்”

நல்ல முயற்சி சித்தார்த்.. தொடர்ந்தும் இங்கே வர வைக்கின்றீர்கள். நீங்கள் படித்துச் சுவைத்த பன்மொழிப் படைப்புக்களைத் தொடர்ந்தும் தாருங்கள்.

-அன்புடன் இளந்திரையன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s